Thursday 2 July 2015

மதுரை காமராஜர் கல்லூரியில் தொடர்போராட்டம்...


அருமைத்தோழர்களே!கடந்தஒருவாரகாலமாகமேற்கண்டநியாயமான   கோரிக்கைகளை வலியுறித்தி MUTA & SFI இரு சங்கங்களும் இணைந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்  01.07.15 மாணவர்களின் எழுச்சி அதிகமானது, அநியாத்தை தட்டி கேட்க வேண்டுமென ஆர்பரித்த மாணவர்களின் உயரிய அமைப்பான  SFI சார்பாக மதுரை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடந்ததில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடனடியாக மதுரை காமராஜர் கல்லூரி முதல்வரை வரவழைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆட்சியர் இசைவு அளித்துள்ளார். இது MUTA  மற்றும்  SFI நடத்திய கூட்டு தொடர்போரட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். 1.7.15 புதன் அன்று நடைபெற்ற ஆர்பாட்ட கூட்டத்திற்கு பேராசிரியர்.அகமது அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர்.முருகேசன் முன்னிலைவகுத்து உரை நிகழ்த்தினார். போராட்டத்தை வாழ்த்தி, கோரிக்கைகளை விளக்கி தோழர்.செந்தாமரை MUTA , தோழர்.லெனின் DYFI, தோழர்.பாவல்  SFI,  நமது மாவட்டச் செயலர்  தோழர். சூரியன் BSNLEU ஆகியோர் வாழ்த்தி பேசினர். இறுதியாக தோழர்.ஜார்ஜ்  நன்றி கூறினார். பிரச்சனைகள் தீராவிடில் அனைத்து சங்கங்களின் ஆதரவோடு  போராட்டம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லும் என்ற கோஷத்தோடு  ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. MUTA & SFI சங்கங்கள் இணைந்து நடத்திய போராட்டத்தின் கோரிக்கைகள் வெற்றி பெற நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

No comments: