Thursday 2 July 2015

தயாநிதி மாறனிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை: சட்டவிரோதமாக BSNL இணைப்பு பயன்படுத்திய வழக்கு.

BSNL இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர்.  இதையொட்டி, தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு தனது வழக்குரைஞருடன் புதன்கிழமை காலை 10.45 மணிக்கு தயாநிதி மாறன் வந்தார். அவரை மட்டும் தலைமையகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள விசாரணை அறைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்ஏழு மணி நேரம் விசாரணை: சிபிஐ துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழு அவரிடம் விசாரணை நடத்தியது. இந்தக் குழுவினர்தான் சென்னை சென்று, BSNL தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆரம்பநிலை விசாரணை நடத்தியவர்கள். தற்போதைய விசாரணையின் போது சிபிஐ சட்டப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி உடனிருந்தார். புதன்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இடையில் பிற்பகல் 1 மணி முதல் 1.30 மணி வரை உணவு சாப்பிட அவருக்கு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக 2004, ஜூன் முதல் 2007 ஜூன் வரை தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் சென்னை போட் கிளப் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கும், சன் டிவி அலுவலகத்துக்கும் இடையே உயர் சக்தி வாய்ந்த தொலைபேசி இணைப்புகளை பூமிக்கு அடியில் போடப்பட்டன. 300-க்கும் அதிகமான இணைப்புகள் மூலம் இந்தத் தொலைத் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டதுஇது தொடர்பாக தயாநிதி மாறனின் உதவியாளர் கௌதமன் (50), சன் டிவி தலைமை தொழில்நுட்ப அலுவலர் எஸ். கண்ணன் (44), மின் ஊழியர் எல்.எஸ். ரவி (42) ஆகியோர் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நிபந்தனை ஜாமீனில் கடந்த மார்ச்சில் விடுதலை செய்யப்பட்டனர்.
 "
தெரியாது' என்றே பதில்: இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான தயாநிதி மாறனிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினோம். தனது வீட்டுக்கும், சன் டிவி அலுவலகத்துக்கும் இடையே எந்த நோக்கத்துக்காக BSNLகேபிள்கள் போடப்பட்டன? இதற்கு உதவிய அதிகாரிகள் யார்? என்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
 "
டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றியோ, சன் டிவி நிறுவனத்தின் தொலைத் தொடர்பு வசதிகள் பற்றியோ ஏதும் தனக்கு தெரியாது. தொழில்நுட்ப அளவில் தனக்குப் போதிய விவரம் தெரியாது' என்று பெரும்பாலான கேள்விகளுக்கு தயாநிதி மாறன் பதில் அளித்தார்.  "பதற்றத்துடன் இருந்தார்!': BSNL இணைப்புகள் வைத்திருந்த விவகாரத்தில் சுமார் 75 கேள்விகள் தயாநிதி மாறனிடம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. விசாரணையின் போது தயாநிதி மாறன் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டதாகவும், சிபிஐ அலுவலகத்தை விட்டு மாலையில் வெளியே செல்லும் போது அவர் மிகவும் சோர்வாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 2013-
இல் வழக்குப் பதிவு: முன்னதாக, தயாநிதி மாறனுக்கு உதவியதாக 2007-இல் BSNL பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது 2011-இல் ஆரம்பநிலை விசாரணை அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, 2013-இல் முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதுஇந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறனை விசாரணைக்கு வரும்படி சிபிஐ அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது. இதையடுத்து, இந்த வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்ஜாமீன் பெற்று புதன்கிழமை சிபிஐ தலைமையகத்தில் ஆஜரானார்.
 
இன்றும் ஆஜராக உத்தரவு
 
BSNL சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் வழக்கில் தயாநிதி மாறன் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் (ஜூலை 2) காலையில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ உத்தரவிட்டுள்ளது.  முன்னதாக, சிபிஐ தலைமையகத்தில் ஆஜராவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு தில்லி வந்த தயாநிதி மாறன், தெற்கு தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். இதைத் தொடர்ந்து, முதல் நாளான புதன்கிழமை சிபிஐ விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் மீண்டும் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு வழக்குரைஞர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் அவர் ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன
.

No comments: