Monday 8 February 2016

‘பொதுத்துறை நிறுவனங்களை விற்பது நாட்டையே விற்பதாகும்’...

நாட்டின் சொத்துக்களும் அதிக லாபம்ஈட்டி வரும் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு கழகம், பாரத் பெட்ரோலிய கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்கு BJP அரசு முடிவு செய்துள்ளதற்கு CITU கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.இதுதொடர்பாக புதுதில்லியில் CITU செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவதுகடந்த 5ம்தேதியன்று இந்து ஆங்கிலநாளிதழில் வெளியான செய்தியில் BJP அரசு இந்தியாவின் திறனுடனும் மிக அதிகமான லாபத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத்துறை நிறு வனங்களை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதுபோன்று மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலிருக்கும் அரசின் பங்குகளையும் விற்பதற்கு தீவிரமான முறையில் விற்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.
இது நாட்டின் அடிப்படையாக இருக்கின்ற பொருளாதார வலிமையை, பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் உலக கார்ப்பரேட்டுகள் லாபம் அடைவதற்கு வழிவகுக்கும்படி மலி வான விலையில் தாரை வார்ப்பது வெளிப்படையாகவேத் தெரிகிறது. இந்த நடவடிக்கைகள் தேசிய நலன்களுக்கும் மக்களின்நலன்களுக்கும் நாசத்தை விளைவிக்கும்.உலகளவில் போட்டியிட்டுக் கொண் டிருக்கும் பெல் என்ற பாரத் ஹெவி எலக்ட்டிரிக்கல் லிமிடெட் நிறுவனம், மிகுந்த லாபம் தரும் எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு கழகம், இந்துஸ்தான் பெட் ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், பாரத்பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் போன்றவற்றையும் பாதுகாப்பு நிறு வனங்களான பிஇஎம்எல், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் போன்றவை விற்பனை பட்டியலில் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது நாட்டையே விற்பதற்கு ஈடானதாகும். பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக அரசு கூறிக்கொண்டாலும் இது நாட்டின் பொருளாதார நிலைமை மோசமான நிலையில் இருப்பதை பிரதி பலிப்பதாக உள்ளது. நாட்டு பற்றுள்ள மக்கள் இது போன்ற பாஜக அரசின் நாசகரமான விளையாட்டை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.CITU நாட்டிற்கு கணிசமான அளவில் வருவாய் ஈட்டித்தருவதும் தேசிய பொருளாதாரத்தில் தங்களது வளத்திலிருந்து முதலீடுகளை அளித்து வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் சிந்தனைக்கே CITU கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறது. இந்தியா விற்கப்பட அனுமதிக்க முடியாது.
எனவே CITU இதுபோன்ற நாசகர மான நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்குமாறு அரசை நிர்ப்பந்திக்கிறது. அனைத்து உழைக்கும் மக்களையும் தொழிற்சங்கங்களையும் அவர்கள் எந்த அமைப்புடன் இணைந்திருந்தாலும் அவர்கள் தங்களது பணியிடத்தில் உடனடியாக போராட்டங்களை நடத்தவேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது. அவர்கள் மத்திய நிதி அமைச்சருக்கும் பிரதமருக்கும் பொதுத்துறையை கலைக்க வேண்டாம், அவற்றை விற்க வேண்டாம் என்று பேக்சையும் மின்னஞ் சலையும் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறது.

No comments: