Monday, 12 January 2015

13.01.2015 மாநிலந் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLலில்  ERP சிஸ்டம் அமலாகிவிட்டால், தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை, எல்லாம் எளிதாகிவிடும் என்று நிர்வாகத்தால் ஆரூடம் சொல்லப்பட்டது. ஆனால் நிலைமை நேர்மாறாக உள்ளது....  
*  பொங்கல் பண்டிகைக்கு Festival Advance        விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு இதுகாறும்  பணம் பட்டுவாடா இல்லை.
*  GPF அட்வான்ஸ்  விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு இதுகாறும் பணம் பட்டுவாடா இல்லை.
*  அனைத்து CSCகளிலும் "SIM CARD" ஒன்றுகூட இல்லை, வாடிக்கை யாளர்களிடம் அன்றாடம் ஏச்சு பேச்சு வாங்க வேண்டியுள்ளது.
*  ஒப்பந்த ஊழியர்கள் பணிசெய்த காலத்திற்கு ஒன்னரை மாதகாலம் ஆகியும் உரிய சம்பளம் பாட்டுவாடா  இல்லை.
--- எத்தனை காலம் இந்நிலை தொடர்வதை அனுமதிப்பது எனவே, நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் 13.01.2015 செவ்வாய் கிழமை மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.
... ஆகவே, 13.01.2015 மதியம் 1 மணிக்கு மதுரை  GM அலுவலகத்தில்நடைபெறும்கண்டனஆர்ப்பாட்டத்தில்  அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுகிறோம். இது தவிர  வாய்ப்பு உள்ள இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: