Monday, 19 January 2015

உலக தடகளம்: இந்திய வீராங்கனைகள் தகுதி . . .

மும்பை மாரத்தான் ஓட்­டத்தில், இந்­தியா சார்பில் முதல் மூன்று இடங்­களை பிடித்த ஜெய்ஷா, லலிதா பாபர், சுதா சிங் ஆகியோர், பீஜிங்கில் நடக்­­வுள்ள உலக தட­கள சாம்­பி­யன்ஷிப் போட்­டிக்கு தகுதி பெற்­றனர்.மும்­பையில், 12வது மும்பை மாரத்தான் ஓட்டம் நடந்­தது. இதில் இந்­தியா சார்பில் பெண்கள் பிரிவில் முதன்­மு­றை­யாக பங்­கேற்ற கேர­ளாவின் ஜெய்ஷா, பந்­தய துாரத்தை 2 மணி நேரம், 37 நிமிடம், 29 வினா­டி­களில் கடந்து முத­லிடம் பிடித்தார். இதன்­மூலம், கடந்த 1995ல் சென்­னையில் நடந்த மாரத்தான் ஓட்­டத்தில் சத்­­பாமா (2 மணி நேரம், 39 நிமிடம், 10 வினாடி) படைத்த தேசிய சாத­னையை முறி­­டித்தார். தவிர இவர், வரும் ஆகஸ்ட் மாதம் சீனாவின் பீஜிங்கில் நடக்­­வுள்ள உலக தட­கள சாம்­பி­யன்ஷிப் போட்­டிக்கு தகுதி பெற்றார். இவர், ஆசிய விளை­யாட்டில் 1500 மீ., (2014, இன்ச்சான்), 5000 மீ., (2006, தோகா) ஓட்­டத்தில் வெண்­கலம் வென்றார்.அடுத்த இரண்டு இடங்­களை லலிதா பாபர் (2 மணி நேரம், 38 நிமிடம், 21 வினாடி), சுதா சிங் (2 மணி நேரம், 42 நிமிடம், 11 வினாடி) கைப்­பற்­றினர். இதன்­மூலம் இந்­திய தட­கள கூட்­­மைப்பு (...எப்.,) நிர்­­யித்த இலக்கை (2 மணி நேரம், 44 நிமிடம்) அடைந்த இவர்கள் இவரும், பீஜிங்கில் நடக்­­வுள்ள உலக தட­கள சாம்­பி­யன்ஷிப் போட்­டிக்கு தகுதி பெற்­றனர். --- மேலும் வெற்றிபெற நமது வாழ்த்துக்கள்.

No comments: