Wednesday, 21 January 2015

ஆகா . . . வென்று . . . எழுந்தது . . . யுகப்புரட்சி . . .


ஜனவரி-21, மாவீரன் லெனின் அவர்களின் நினைவு நாள் ஆகும். அடிமை பட்டிருந்த மக்களின்விடுதலை பெறுவதற்காக மகள் திரண்டேழுந்த மக்களின் உண்மையான எழுச்சி யை பற்றி நமது முண்டாசு கவிஞன் பாரதி குறிப்பிடும் பொழுது  ஆகா .  .  .  வென்று .  .  .  எழுந்தது  .  .  .  யுகப்புரட்சி .  .  .என புளங்காகிதம் அடைந்து பாடினார்...
அதுபோன்று இன்று மத்தியில் அமைந்துள்ள பி.ஜே.பி அரசு   எந்த வகையிலும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் தனியார், அன்னிய கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு   கதவை அகல திறந்து விடுவது என்ற திசை வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய பிஜேபி சர்கார் கடைபிடிக்கும் மக்கள்விரோத கொள்கைக்கு எதிராக BSNL ஊழியர்கள் + அதிகாரிகள் ஒன்றிணைந்து நடத்தும்" SAVE BSNL"தேச பக்த போராட்டத்திற்கு AIIEA சங்கம் தானாக முன்வந்து ஆதரவு இயக்கம் நடத்துகிறது. 
 அதன் ஒருபகுதியாக மதுரை, ஆரப்பாளையம், எ.எ.ரோட்டில் உள்ள இன்சுரன்ஸ் அலுவலத்தில் நடைபெற்ற  " SAVE BSNL"  கையெழுத்து இயக்கத்திற்கு AIIEA சங்கத்தின் பொதுச் செயலர் தோழர்.என். சுரேஷ் குமார் முன்னிலை வகுத்தார். AIIEA சங்கத்தின் தலைவர் தோழர்.ஜி. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். நோக்கம் குறித்து BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலர் எஸ். சூரியன் பேசினார். " SAVE BSNL"  கையெழுத்து இயக்கத்திற்கு AIIEA சங்கத்தின் சார்பாக போஸ்டர் வெளயிட்டு, நினைத்த மாத்திரத்தில் 100 க்கணக்கான தோழர்களை திரட்டியது மிகவும் பாராட்டுக் குரியது ஆகும்.  முதல் கையெழுத்தை பதிவு செய்து பெருமை சேர்த்தவர் மூத்த  தோழர் சந்திர சேகர பாரதி அவர்கள் ஆகும்....என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் --D/S-BSNLEU.

No comments: