அருமைத் தோழர்களே ! எதிர்வரும் செப் - 2 இந்திய நாடு முழுவதும் சுமார் 20 கோடி தொழிலாளிகள் பங்குபெறக்கூடிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. அதனை மிக சிறப்பாக அமல்படுத்திடும் முகத்தான் மதுரை மாவட்டத்தில் 22-08-16 அன்று மேலூரில் பிரச்சார இயக்கம்...துவங்கியது.
மாவட்டத்தலைவர் தோழர்.A. பிச்சைக்கண்ணு, மாவட்ட செயலர் தோழர். C. செல்வின் சத்தியராஜ், மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர்கள், A. நெடுந்செழியன், N. செல்வம் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். S. சூரியன் ஆகியோர் இந்த பிரச்சார இயக்கத்தில் பங்கு பெற்றனர் . . .
காலையில் மேலூரில் தொடங்கிய இந்த பிரச்சார இயக்கம் , ஒத்தக்கடை, ஹைகோர்ட் , திருநகர், திருமங்கலம் ஆகிய ஊர்களில் ஊழியர்களை சந்தித்து செப்டம்பர் -2 வேலைநிறுத்தத்திற்கான அவசியத்தை எடுத்துக்கூறி அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்குபெற வேண்டுமென்ற வேண்டுகோளையும் வைத்தனர். சென்ற இடங்கள் அனைத்திலும் ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றதோடு, அனைவரும் உறுதியாக செப்டம்பர் -2 வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதற்கான உறுதியை ஏற்றனர்.
அதன்பின் மதுரை குட்செட் தெருவில் உள்ள LIC அலுவலகத்தில் மதுரை நகர தொழிற்சங்கங்கள் சார்பாக நடைபெற்ற செப்டம்பர்-2 வேலைநிறுத்தத்திற்கான சிறப்பு கருத்தரங்கில் நமது BSNLEU சங்கம் சார்பாக ஏராளமான தோழர்கள் பங்குபெற்றனர். கூட்டத்திற்கு AIIEA மாவட்டத்தலைவர் தோழர். மீனாட்சி சுந்தரம் தலைமை வகுத்தார். நமது BSNLEU மாவட்டச்செயலர் தோழர் சி. செல்வின் சத்தியராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். BEFI, NFIFWI, CLASS1, AIIPA, , DREU, MRGIEA ஆகிய சங்கங்கள் சார்பாக வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர் Com Thomas Franco AIBOC, சிறப்புரை நிகழ்த்தினார்.இறுதியாக தோழர் புஷ்பராஜ் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment