Monday 8 August 2016

மல்லையாவின் 6000 கோடி சொத்து பறிமுதல்-அமலாக்கத்துறை.

வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் ரூ.6 ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளது.நிதி முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டாவது கட்ட சொத்துப் பறிமுதல் நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுக்க முடிவெடுத்துள்ளது. சட்டவிரோத நிதி நடவடிக்கை தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தும் மல்லையா அலட்சியமாக இருந்துவருகிறார். இதையடுத்து அமலாக்கத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.மல்லையா குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில உறுதிப் பங்குகள், இது தொடர்பான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கையை துரிதப்படுத்த அமலாக்கத்துறை துரிதப்படுத்தப்போவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கெனவே அமலாக்கப் பிரிவு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து விவரங்களை கேட்டுள்ளது. மல்லையாவை தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவை நீதிமன்றத்திலிருந்து பெற்று அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு முறைகேடு, மோசடி வழக்கு தொடர்பாக ரூ.1,411 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்தது. இந்நிலையில் மேலும் ரூ.6 ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளது
ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட்
எதிரான, மற்றொரு செக் மோசடி வழக்கில், அவருக்கு ஜாமீனில் வர முடியாத கைது உத்தரவை தில்லி நீதிமன்றம் பிறப்பித்தது.‘கிங் பிஷர்சாராய ஆலை அதிபரான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை வாங்கி விட்டு, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார். அவருக்கு எதிரான கடன் மோசடி வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி என்று பணமோசடி தடுப்பு நீதிமன்றமும் அண்மையில் அறிவித்தது.இதனிடையே, பல்வேறு நிறுவனங்களுக்கு விஜய் மல்லையா அளித்திருந்த காசோலைகள், அவரது வங்கிக் கணக்குகளில் போதிய பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன. இதுதொடர்பான பல செக் மோசடி வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.இதில் ஜி.எம்.ஆர். ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், அவரை ஹைதராபாத் மூன்றாவது சிறப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.எனினும் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தண்டனை அறிவிக்கப்படாமல் உள்ளது.செக் மோசடி வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த மனுவையும், தில்லி நீதிமன்றம் கடந்த ஜூலை 27-ம் ரத்து செய்தது. இந்நிலையில், மற்றொரு செக் மோசடி வழக்கில், தில்லி பாட்டியாலா நீதிமன்றம் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது.மல்லையா, நவம்பர் 4ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: