இரண்டாம் உலகப் போரின்போது, ஹிரோஷிமா, நாகசாகி நகரத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 71-வது நினைவு தினம், இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமெரிக்காவின் எனோலா கே என்கிற B-29 குண்டு முதல் அணுகுண்டான 'லிட்டில் பாய்' குண்டை ஹிரோஷிமாவின் மீது வீசினார். இரும்பைக் கூட உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் குண்டு வீசப்பட்ட இடத்தின் அருகிலிருந்த அத்தனையும் பஸ்பமாகின. சுமார், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்கள் குண்டு வெடிப்பில் சிக்கி கொல்லப்பட்டனர். இதற்கு அடுத்த அணுகுண்டு ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகியில் ஆகஸ்ட் 9, 1945 அன்று வீசப்பட்டு, எழுபதாயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ல், 1945 அன்று ஜப்பான் சரணடைந்தது.
உலக அளவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த அணுகுண்டு தாக்குதல் நிகழ்த்த வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்றும், ஜப்பான் இந்தப் போரில் தோல்வியைத் தழுவ இருந்த நிலையில்தான் அமெரிக்கா இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது.
No comments:
Post a Comment