அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்ட BSNLEU சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் தோழர்.A. பிச்சைக்கண்ணு தலைமையில் 04-10-16 அன்று மதுரை CSC-TKM-TRC-யில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. செயற்குழுவில் அறிவிக்கப்பட்டிருந்த ஆய்படு பொருளின் மீதான அறிமுக உரையை மாவட்டச் செயலர் தோழர்.C. செல்வின் சத்தியராஜ் நிகழ்த்தினார். ஆய்படு பொருளின் மீது 34 தோழர்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் எஸ். ஜான் போர்ஜியா, பி. சந்திர சேகர், முன்னாள் மாவட்ட சங்க நிவாகிகள் எம். சௌந்தர், எஸ். சூரியன், ஆர். சண்முகவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நடைபெற்ற சிறப்பு மாவட்ட செயற்குழுவில் , சென்னையில் நடைபெறவிருக்கும் BSNLEU 8வது அகில இந்திய மாநாட்டிற்கான நன்கொடை நிதியாக ரூபாய் 1,65,000 வசூல் வந்தது. இத் தொகை உடனடியாக மாநில சங்கத்தின் வாங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றது. ஏற்கனவே, மதுரை மாவட்ட சங்கத்தின் முன் பணமாக ரூபாய் 15,000 த்துடன் சேர்த்து ஆகி மொத்தம் ரூபாய் 1,80,000 கொடுக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்திற்கு மாநில சங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மீதி தொகை வழங்கிட மதுரை மாவட்ட செயற்குழு திட்டமிட்டது. இறுதியாக தோழியர் வி. ராஜேந்திரி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment