Thursday, 27 October 2016

27-10-16 நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

அருமைத் தோழர்களே ! BSNL-லில் உள்ள 65000 டவர்களை, மக்கள் சொத்தான பொதுத் துறையின் டவர்களை தனியாக பிரித்து தனியார்மய படுத்தி, தனியார்க்கைகளில் ஒப்படைப் பதற்கான முயற்ச்சியை மத்தியில் ஆளும் மோடி அரசு திட்டமிடுவதை கைவிடக் கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்தும் BSNL-லில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் இந்திய நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்திட அகில இந்திய FORUM-த்தின் அறைகூவலின் ஒரு பகுதியாக  மதுரை மாவட்ட BSNL  பொது மேலாளர் அலுவலகத்தில் 27-10-16 மதியம் 1 மணிக்கு சக்தியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு AIBSNLEA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.என். சீனிவாசன் தலைமை தாங்கினார்.  AIBSNLOA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர். முருகன் ,  SNEA சங்கத்தின் மாநில உதவிச் செயலர் தோழர். சந்திரசேகர் ,     மற்றும்  மதுரை மாவட்ட FORUM கன்வீனரும் BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலருமான தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர். (அனைத்து சங்கங்கள் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தில்  NFTE மதுரையில் கலந்து கொள்ளாதது வருத்தத்திற்குரிய  விஷயமாகும்)
இறுதியாக BSNLEU மாவட்ட சங்கத்தின் தலைவர் தோழர். எ. பிச்சைக்கண்ணு அனைவருக்கும் நன்றி கூறி உரை நிகழ்த்தினார். தோழர்.G.K.. வெங்கடேசன்  ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பினார்.
27-10-16 திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காட்சிகள் . . .
27-10-16 பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் . . . 

No comments: