Sunday, 23 October 2016

BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது...

imggalleryஉலக்கோப்பை கபடி இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஈரான் அணியனர் இந்தியாவுக்கு கடும் சவால் கொடுத்தனர். முதல் பாதியில்  13-18 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் அணியினர்  முன்னிலை பெற்றிருந்தனர்இரண்டாவது பாதியில் தொடக்கத்தில் இருந்து இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.  இரண்டாவது பாதியில் மட்டுமே ஈரானை இரண்டு முறை ஆல் அவுட் செய்து அசத்தியது இந்தியா.அஜய் தாக்கூர் மட்டும் தனது ரெய்டு மூலம் 12 பாயிண்டுகள் எடுத்தார்.
இறுதியில் 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றதுகடைசி இரண்டு உலகக்கோப்பை கபடி இறுதிப் போட்டியிலும் இந்தியா-ஈரான் அணிகள்தான் மோதின. இரண்டிலும் இந்தியா தான் வெற்றி பெற்றிருந்ததுதற்போது இந்த அணிகள் மோதிய மூன்றாவது இறுதிப்போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இதன்மூலம் 8-ஆவது முறையாக உலகக் கோப்பை வென்று இந்திய அணி அசத்தியது. BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது...

No comments: