30.10.2016 மதுரைபாராளுமன்ற உறுப்பினர் தோழர். பி.மோகன்
அவர்களின்
நினைவுநாள். மதுரை மக்களின்அனைவரது அன்பை பெற்றவர்
என்றுசொன்னால் அது மிகையாகாது.தோழர்.P.மோகன் என்று சொன்னால் எந்தஅரசியல் கட்சிகளுக்கும், எந்த சாதி, மதம்எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக மதுரையை வளம் வந்த பெருமைமிகு
தோழர்.பி.மோகன் ஆவார்.
மதுரை மண்ணின் மைந்தராக அனைவரயும் பெயர் சொல்லி அழைக்க கூடியஅளவில் மக்களோடு இரண்டற கலந்த தலைவன் தோழர்.P.மோகன் ஆகும்.நமதுபகுதியில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவளித்து, வாழ்த்திய அன்புத்தலைவர் அவர். எந்த பகுதிஊழியர்கள், மக்கள் போராடினாலும் அங்கு ஓடோடி வந்து குரல் கொடுத்த தலைவன். மதுரை மக்களின்முன்னேற்றத்திற்காக, அரசு மருத்துவமனை முன்னேற்றம் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்திய மக்கள்தலைவர். செம்மொழிக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்த உத்தமர் தோழர்.P.மோகன்ஆகும்.பாராளுமன்ற ஒதிக்கீடு நிதிதனை மக்கள் நலத் திட்டங்களுக்காகவே முழுக்க முழுக்க முன் நின்றுபணியாற்றிய பண்பாளர்.மாணவ பருவம் முதற் கொண்டு இறுதி
வரை தான் கொண்ட மார்க்சிய கொள்கையில்உறுதியாக நின்ற உயர்ந்த மனிதர் தோழர்.Pமோகன் 2009 ஆம் ஆண்டு-அக்டோபர் 30 நம்மை விட்டுப் பிரிந்த அன்புத்தலைவன் தோழர். மோகன் மறைந்து
இன்றோடு 7 ஆண்டுகள் உருண் டோடி விட்டது. உழைப்பாளிவர்க்கத்திற்காக தனது
இந் நுயிரை ஈந்த அந்த தலைவன் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து போராடிவெல்வோம் என இந் நாளில் சபதம் ஏற்போம்.
No comments:
Post a Comment