Tuesday 25 October 2016

பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை நீக்கம் செய்ததை கண்டித்து ...

அருமைத் தோழர்களே ! சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 11 ஒப்பந்த ஊழியர்களை திடீரென டெண்டர் மாறிவிட்டார் என்ற காரணத்தை சொல்லி வேலைநீக்கம் செய்யப்பட்டு  கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டு அவதியுறும்  அந்த அப்பாவி 11 ஒப்பந்த ஊழியர்களை உடனடியாக பணிக்கு மீண்டும் எடுக்க கோரி தமிழகம் தழுவிய மாலை நேர தர்ணாவின் ஒரு  பகுதியாக மதுரை தல்லாகுளம், லெவல்-4 பகுதியில் BSNLEU + TNTCWU இரு மாவட்ட சங்கங்களின் தலைவர்கள் தோழர்கள் A. பிச்சைக்கண்ணு, K. வீரபத்திரன் ஆகியோர்கூட்டுத் தலைமையில்  மிகவும் சீறு சிறப்புமாக நடைபெற்றது.  தர்ணாவில் 18 பெண்கள் உட்பட நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தர்ணா போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU + TNTCWU  இரு சங்கங்களின் மாவட்ட செயலர்கள் தோழர்கள் C. செல்வின் சத்யராஜ், N. சோணைமுத்து  இருவரும் விளக்கி உரைநிகழ்த்தினர் . அதனை தொடர்ந்து TNTCWU மாநில சங்க நிர்வாகி தோழர். அன்பழகன், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், வள்ளி, T.K.சீனிவாசன், S. சூரியன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர். R. சுப்புராஜ் நன்றி கூற தர்ணா போராட்டம் நிறைவுற்றது.

No comments: