அருமைத் தோழர்களே ! 20-10-16 அன்று சென்னையில் நமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டமும், நமது BSNLEU சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக்குழுவின் கூட்டமும் தோழர் எஸ். செல்லப்பா தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
நடைபெற்ற கூட்டத்தில் நமது மதுரை மாவட்டத்திலிருந்து தோழர்கள் எ. பிச்சைக்கண்ணு, சி. செல்வின் சத்தியராஜ், எஸ். ஜான் போர்ஜியா, பி. சந்திரசேகர் மற்றும் எஸ். சூரியன் ஆகிய 5 பேரும் கலந்து கொண்டனர். அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் நிதி கோட்ட ஒதுக்கீடு செய்யப்ப ட்டத்தில் விருத்துநகர் , நாகர்கோவில் இரு மாவட்டங்களும் நிறைவு செய்து விட்டன.
நமது மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ள ரூபாய் 7 லட்சத்தில் முதற்கட்டமாக ரூபாய் 3,20,000 மாநில சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது மீதம் உள்ள தொகையினை போனஸ் அல்லது சம்பள பட்டுவாடா ஆகியவற்றில் முழுமையான நிதியை அளித்து விட வேண்டுமென மாநில சங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளச் சங்கங்கள் காலத்தே இதற்கான ஏற்பாட்டை செய்து முடித்திட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment