அருமைத் தோழர்களே ! BSNL நிறுவனத்தின் புத்தாக்கத்திற்காக நாம் நமது சேவைகளின் தரத்தை அதிகப்படுத்த பல் வேறு முயற்சிகள் எடுக்க வேண்டுமென நமது அகில இந்திய, மாநில, மாவட்ட சங்கங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றது. தரத்தை மேம்படுத்தும் நமது முயற்சிகளில் ஒன்றாக பில்லர்களை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதும் ஒரு பணி. அந்த அடிப்படையில் பழனியில் பணியாற்றும் நமது BSNL ஊழியர் சங்கத்தின் கிளைத்தலைவர் தோழர் சாது சிலுவை மணி T.T அவர்கள் அவரது பகுதியில் உள்ள பில்லரை சரி செய்த பின் எடுத்த புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. தோழரின் பணிக்கு, நமது மதுரை மாவட்ட BSNL ஊழியர் சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment