அருமைத் தோழர்களே ! சென்னை CGM-BSNL அலுவலகத்தில் நீக்கப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி கோரி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட நமது தமிழ் மாநில சங்கம் அரை கூவலுக்கிணங்க, 7-10-15 காலையில் -மதுரை தல்லாகுளம் லெவல்-4 வளாகத்தில் தோழர்கள், எ. பிச்சைக்கண்ணு & கே. வீரபத்திரன் இருவரின் கூட்டுத் தலைமையில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடந்தது. . . .
ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர்,சி, செல்வின் சத்தியராஜ், TNTCWU மாவட்ட உதவிச் செயலர் தோழர். எஸ். சூரியன், மாவட்ட செயலர் தோழர் என். சோணை முத்து ஆகியோர் உரை நிகழ்த்தினர். BSNLEU மாவட்ட உதவி தலைவர் தோழர். வி. சுப்புராயலு நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment