Friday 8 August 2014

07.08.14 நாடு தழுவிய JACஆர்ப்பாட்டம் GM அலுவலகத்தில்.

அருமைத் தோழர்களே! 07.08.14 நாடு தழுவிய JACஆர்ப்பாட்டம் நமது மதுரை GM அலுவலகத்தில்  மதியம் உணவு இடைவேளை நேரத்தில் மிகவும் சக்தியாக நடைபெற்றது. 30 அம்ச கோரிக்கைகளை தோழர்.GKV கோஷம் எழுப்ப, கூட்டுத் தலைமையாக தோழர்கள் சி.செலவின் சத்தியராஜ்,-DP.BSNLEU, டொமினிக் சேவியோ,-DP.TEPU, கண்ணன்-DP.SNATTA ஆகியோர் தலைமை உரையாற்றினார். 48 பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டடோர் கலந்துகொண்டனர்.

இப் போரட்டத்தில், மதுரையில்  JAC-இயக்கத்தில் இணைந்து வந்திருக்க வேண்டிய NFTE மற்றும் FNTO சங்கங்கள்  கலந்து கொள்ளாத வருத்தம் பதிவு செய்யப்பட்டதோடு, எதிர்வரும் காலங்களில் இந்நிலையை தவிர்த்து ஒன்றுபட்ட MAIN STREM-ல் அச் சங்கங்களும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளும் கூட்டத்தில்  வைக்கப்பட்டது. குறிப்பாக அடுத்து 12.08.2014 அன்று இந்திய நாடு முழுவதும், அனைத்து அதிகாரிகள் + ஊழியர் சங்கங்கள் இணைந்து நடத்த  இருக்கவிருக்கும் மத்திய அரசின் ஊழியர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டங் களிலாவது NFTE + FNTO தன்னை இணைத்துக்கொள்ள வேண்டுமென மதுரை மாவட்ட JAC கேட்டுக்கொள்கிறது. அகில இந்திய அளவில் அனைத்து சங்கங்களும் இணைந்த செயல்பாட்டில் இருக்கும் பொழுது மதுரையில் மட்டும் அவர்கள் விலகி நிற்பது பொருத்தமல்ல என்பதை தோழமையோடு சுட்டி கட்ட விரும்புகிறோம்.
மேலும் கோரிக்கையை விளக்கி . . . . .
1.  தோழர். அழகு பாண்டிய ராஜா, SNATTA- மாநில செயலர்.
2.  தோழியர். D.மகேஸ்வரி, TEPU-அகிலஇந்திய நிர்வாகி .
3.  தோழர் .  N.சோணைமுத்து .TNTCWU-  மாவட்டச் செயலர்
4.  தோழர்   . S. சூரியன் BSNLEU-  மாவட்டச் செயலர்.
ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர். N.முருகன்,TEPU- மாவட்ட செயலர் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. 
JAC போராட்டம் வெற்றிபெற AIBSNLEA சங்கம்,  தோழமை வாழ்த்து தனது இனைய தளத்தில் தெரிவித்திருந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
JAC அறைகூவலுக்கு இணங்க , திண்டுக்கல், தேனி , பழனி ஆகிய இடங்களிலும் மிகவும் சக்தியாக நமது தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி யுள்ளனர் அவர்களுக்கு நமது மாவட்ட மையத்தின்  வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்....என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் --D/S-BSNLEU.

No comments: