Saturday 2 August 2014

BSNL ஊழியர் நலவாரியக்கூட்டம் 22.08.14 நடைபெறும்

அருமைத் தோழர்களே! நமது BSNL ஊழியர் நல வாரியம் -STAFF WELFARE BOARD-BSNL ஊழியர் நல வாரியக்கூட்டம்  22/08/2014  அன்று டெல்லியில் CMD தலைமையில்  காலை 11 மணிக்கு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமது BSNLEU அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கத்தின் சார்பில் நமது பொதுச்செயலர் தோழர்.பி.அபிமன்யு அவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார். நமது சங்கத்தின் சார்பாக  
கீழ்க்கண்ட பிரச்சினைகள்  கூட்டத்தில் விவாதிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

  • கல்வி உதவித்தொகை SCHOLARSHIP விண்ணப்பிப்பதற்கான அடிப்படைச்சம்பள நிர்ணயத்தை உயர்த்துதல். REMOVAL OF BASIC PAY LIMIT.
  • பல கல்வி நிலையங்களில் மதிப்பெண்களுக்குப்  பதிலாக GRADE முறை அமுலில் இருப்பதால் புதிய வழிகாட்டுதல் அறிவிக்கப்பட வேண்டும்.
  • தற்போதுள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்துதல்.
  • குறைந்த வட்டியுடனோ, வட்டி இல்லாமலோ கல்விக்கடன் வழங்குதல்.
  • FASHION TECHNOLOGY படிப்பை கல்வி உதவித்தொகை பெற அங்கீகரித்தல்.
  • இறப்பு அன்று வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.25000/= என  உயர்த்துதல்.
  • இறப்பு அடையும் ஊழியர்களுக்கு ரூ.3 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்குதல். இதற்காக மாதந்தோறும் காப்பீட்டுத்தொகை பிடித்தம் செய்தல்.
  • நலவாரிய நிதி ஒதுக்கீட்டை  FUND உயர்த்துதல்.
  • ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான அன்பளிப்பை உயர்த்துதல்.
  •  நலவாரிய நிதி ஒதுக்கீட்டை விரைந்து முடித்தல்.
  • இயற்கை பேரழிவில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.10000/= உதவி அளித்தல்.
  • மனமகிழ் மன்றங்களுக்கான நிதி உதவியை ரூ.10000/= முதல் 30000/= வரை வழங்குதல்.
  •  சுற்றுலா செல்ல வழங்கப்படும் உதவித்தொகை 2002ல் நிர்ணயம் செய்யப்பட்டது. இது உடனடியாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். 90 சத செலவு ஈடுகட்டப்பட வேண்டும். 2000 KM வரை சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
  • ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தை உயர்த்துதல்.
  • கிர் காடுகள்,டாமன் டையு மற்றும் போர்பந்தரில் HOLIDAY HOME விடுமுறை வீடுகளை கட்டுதல்.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களை நலவாரிய உறுப்பினர்களாக அனுமதித்தல்.
  • நலவாரிய உறுப்பினர் காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்துதல்.

No comments: