Wednesday 6 August 2014

CPI(M) - CITU தலைவர் பி.எம்.குமார் மதுரையில் காலமானார்

இந்திய தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான பி.முத்துக்குமார் என்ற பி.எம்.குமார் மதுரையில் புதனன்று காலமானார். அவருக்கு வயது 74.மதுரை வளர்நகர், ராஜீவ்காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன ன்று காலை 8.30 மணியள வில் காலமானார் அவருக்கு கஸ்தூரி என்ற மனை வியும், பிரகாஷ் என்ற வளர்ப்பு மகனும் உள்ள னர்.கைநெசவுதொழிலாளி:மதுரைசெல்லூர் திருவாப்புடையார் கோவில் பகுதியில் பாரம்பரியமான கைநெசவுக் குடும்பத்தைச் சேர்ந்த பழனியப்பன், அங் கம்மாள் ஆகியோரின் புதல்வரான பி.எம்.குமா ரும் ஒரு கைநெசவுத் தொழிலாளியாவார். தமிழரசு கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்ட அவர், தமிழ கத்துடன் தேவிகுளம்- பீர் மேடு பகுதிகளை இணை க்க வேண்டும் என்ற போராட்டத்தில் முன் நின்றவராவார். கலை இலக்கியத்தின் மீது தீராத காதல் கொண்ட பி.எம்.குமார் பல நாடகங்களில் வேடமிட்டு நடித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் கொள்கை யின்பால் ஈர்க்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பஞ்சாலைத் தொழிலாளர் சங்க செய லாளராக பொறுப்பு வகித்த அவர், படிப்படி யாக மாநிலப் பொதுச் செயலாளராக, மாநிலத் தலைவராக நீண்ட நாட் கள் பதவி வகித்தார்.
அஞ்சலி:அவர் இறந்த செய்தி கேட்டதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் சென்னையில் இருந்து விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினார். மதுரை மாநகர், புறநகர் மாவட்டக்குழுத் தலை வர்களும், சிஐடியு மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் குழுத்தலைவர்கள் பி.எம். குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் பா.விக்ரமன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. ஜோதிராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.நன்மாறன், செம்மலர் ஆசிரியர் எஸ்..பெருமாள், புறநகர்மாவட்டச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன்,   கோவை மாவட்ட தலைவர்கள் பி.ஆர்.நடரா ஜன், சி.பத்பநாபன், ஆறுமுகம், சிபிஎம் தேனி மாவ ட்ட செயலாளர் வெங்கடேசன், கே.ராஜப்பன், சிஐடியு மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் வீ. பிச்சை, மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், புறநகர் மாவட்டத் தலைவர் கே.அரவிந்தன், புறநகர் மாவட்டச் செயலாளர் பொன்.கிருஷ்ணன், விருதுநகர் மாவட்டத் தலைவர் அசோகன், நமது BSNLEU சார்பாக தோழர்கள்,சி.செல்வின்சத்தியராஜ், எம்.சௌந்தரராஜன், எஸ்.சூரியன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.தோழர்.பி .எம்.கே அவர்களின் மறைவிற்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

No comments: