Monday, 19 January 2015

ஜனவரி -19 தியாகிகள் அஞ்சலிகூட்டம்-CITU . . .

 அருமைத் தோழர்களே ! 1982 ஜனவரி -19  அன்று நடைபெற்ற தொழிலாளி வர்க்கப் போராட்டத்தில்,அராசாங்கத்தின் காட்டு மிராண்டித் தாக்குதலால்  துப்பாக்கிக் குண்டிற்கு பலியான விவசாயத் தொழிலாளிகள்  " தோழர்கள், அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் " ஆகிய  தியாகிகளின் நினைவாக   அஞ்சலிகூட்டம், மதுரையில்  ஆவின் அலுவலக -CITU சங்கம் சார்பாக மிக மிக எழுச்சியோடு தோழர். அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. . .
இக் கூட்டத்தில் மதுரை மாநகரின் பல்வேறு தொழிற்சங்கங்களின், அமைப்புகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை துவக்கி வைத்து CITU , சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டச் செயலர் தோழர் ஆர். தெய்வராஜ் அவர்கள் உரைநிகழ்த்தினார். அதன்பிறகு நமது BSNLEU சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர். எஸ். சூரியன் தியாகிகளின் நினைவாக உரைநிகழ்த்தினார்.  அதன்பின் CITU , சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டச் உதவிச் செயலர் தோழர். லெனின் நிறைவுரை நிகழ்த்தினார்.
இந் நிகழ்ச்சிக்கு நமது BSNLEU சார்பாக தோழர்கள், எம். சௌந்தர், எ.நெடுஞ்செழியன், ஆர். சுப்புராஜ் ஆகிய தோழர்களும் கலந்து கொண்டனர் என்பது சிறப்பம்சமாகும்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது அஞ்சலியினையும் காணிக்கையாக்குகிறேன்