Sunday 15 March 2015

14.03.15 மதுரையில் "SAVE BSNL" கருத்தரங்கம் . . .

அருமைத் தோழர்களே ! 14.03.15 சனிக்கிழமையன்று மதுரை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில், BSNL அதிகாரிகள்+ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக  "SAVE BSNL" கருத்தரங்கம்  FORUM தலைவர் தோழர்.எஸ். சிவகுரு நாதன்  தலைமையில்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. . . .
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, புதிய வடிவில் தோழர் கே. தெய்வேந்திரன் D/S-SNEA உரையாற் றினார்  முன்னிலை வகுத்த FORUM-கன்வீனர் தோழர். எஸ்.சூரியன் நமது  மதுரை மாவட்டத்தில் முன்னெடுத்து செல்ல வேண்டிய பணிகள், கடமைகள் குறித்து நினைவு கூர்ந்து உரை நிகழ்த்தினார்.







  கருத்தரங்கத்திற்குசிறப்புரைக்கு  அழைக்கப் பட்டிருந்த FORUM  தமிழ் மாநில கன்வீனர் தோழர். எஸ்.செல்லப்பா அவர்களும்,    FORUM  தமிழ் மாநில தலைவர் தோழர். ஆர். பட்டாபி அவர்களும், AIIEA இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மதுரை மண்டல பொதுச் செயலர் தோழர் என். சுரேஷ் குமார் அவர்களும் மிகவும் பயனுள்ள உரையை நிகழ்த்தினார்கள். அவர்களுக்கு நமதுமதுரை மாவட்ட FORUM சார்பாகநன்றிகலந்தபாராட்டுக்களை தெரிவிக் கின்றோம் இறுதியாகAIBSNLEAஅகிலஇந்திய அட்வைசர் தோழர். வி.கே. பரமசிவம் அற்புதமான நன்றியுரை நிகழ்த்த கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி வெற்றிபெற பங்காற்றிய அனைவருக்கும் நமது  மதுரை மாவட்ட FORUM சார்பாக நன்றிகளை  உரித்தாக்குகிறோம்.
கருத்தரங்கம்முடிவாக:- மதுரைமாவட்டத்தில்மீண்டும்50,000"SAVE BSNL"  கையெழுத்துக் களை பொதுமக்களிடம் பெறுவது என்றும், எதிர்வரும் ஏப்ரல் 21 & 22 தேதிகளில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது என்றும் உறுதிபூண்டது. 
--- என்றும் தோழமையுடன் , எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: