Monday 30 March 2015

தோழர் ஜோதிபாசு நூற்றாண்டு விழா நிறைவு கொல்கத்தாவில் சர்வதேச ஓவியக் கண்காட்சி.

இந்திய உழைக்கும் மக்களின் உன்னதத் தலைவர் ஜோதிபாசுவின் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி சர்வதேச ஓவிய கண்காட்சி ஒன்று கொல்கத்தாவில் துவங்கியுள்ளது.ஜோதிபாசு நூற்றாண்டு விழாக்கமிட்டியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஓவியக் கண்காட்சியானது கடந்த 24ம்தேதியன்று தொடங்கப்பட்டது. கண்காட்சி 30ம்தேதி நிறைவு பெறுகிறது.புகழ்பெற்ற வசிம் கபூர் கொல்கத்தாவிலுள்ள அருங்காட்சியகத்தில் இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்து 500 ஓவியர்கள் தங்களது சிலைகளையும் படைப்புகளையும் ஜோதிபாசுவிற்கு மாரியாதை செலுத்தும் முகமாக அனுப்பியுள்ளனர். 12 நாடுகளில் இருந்து இக்கண்காட்சியில் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.முன்னதாக கண்காட்சியை முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தொடங்கிவைத்தார்.மேற்குவங்க சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் ஹாசிம் அப்துல் ஹலிம் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா பேசும்போது, ஜோதிபாசுவின் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்வது நமது பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் ஜோதிபாசுவின் அரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அனைத்து துறைகளையும் அனைத்து தரப்புகளையும் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். பெருவாரியாக திரண்டு வந்திருந்த மக்கள் தங்களது அன்புக்குரிய தலைவருக்கு அஞ்சலியை செலுத்தினர்...நாமும் இணைவோம்.

No comments: