Friday 15 November 2013

மத்திய அரசின் நிதிக்கமிஷன் பாராட்டும் மகிழ்ச்சியும் ...

திட்டங்களை திரிபுரா அரசு சிறப்பாக அமலாக்குகிறது 
நிதிக்கமிஷன் பாராட்டு
திரிபுரா மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ரூ.67 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 14வது நிதிக் கமிஷனிடம் திரிபுரா அரசு கோரிக்கை வைத்துள்ளது. பெருமளவிற்கு உள்கட் டமைப்பு வசதிகளை மேம் படுத்துவது, உள்ளாட்சி அமைப்புகளை வலுப் படுத்தி செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செல வினங்களை ஈடுகட்டி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்பு ஒதுக்கீடாக ரூ.67 ஆயிரத்து 104 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருப்பதாக அகர்தலாவில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கூறினார். ஒய்.வி.ரெட்டி தலைமையிலான மத்திய அரசின் 14வது நிதிக்கமிஷன் மூன்று நாள் பயணமாக திரிபுரா வந்துள்ளது. இக்குழு முதலமைச்சரையும், உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளையும் நேரில்சந்தித்து நிதிச்செலவினங்கள் குறித்தும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தது.இக்குழுவைச் சந்தித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மாணிக் சர்க்கார், திரிபுரா மாநில அரசின் நிதி ஒழுங்கு மற்றும் நேர்மையான நிர்வாகம் குறித்து நிதிக்கமிஷன் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மத்திய திட்டங்கள் அனைத்தையும் சிறப்பான முறையில் அமலாக்கி வருவது குறித்து நிதிக்கமிஷன் பாராட்டு தெரிவித்தது என்றும், அதைக் கருத்தில் கொண்டு மேலும் நிதிஒதுக்குவது குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.மேலும், நாட்டிலேயே 73 சதவீதம் அளவிற்கு வனப்பாதுகாப்பை உறுதி செய்து மிகப்பெருமளவில் காற்று மண்டலத்தை தூய்மைப்படுத்துவதில் திரிபுரா அரசே முன்னிற்கிறது எனவும் நிதிக்கமிஷன் பாராட்டியுள்ளது. இதை அங்கீகரித்து பசுமை போனசாக கூடுதல் நிதி ஒதுக்குமாறும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.                                                                                                     ....தீக்கதிர் 

No comments: