Monday 18 November 2013

இதுதான் இன்றைய அரசின் நிலைப்பாடு...

இல்லாதவர்களுக்கு வரிச்சுமை; இருப்பவர்களுக்கோ வரிச்சலுகை
திரு.சிதம்பரத்தை பொருத்தவரை, நாட்டில் உள்ள எல்லா பிரச்னையும் வரி போட்டால் தீர்ந்துவிடும் அல்லது பிரச்னைகளை மறைத்துவிடலாம் என நம்புவதுதான் நமக்கு சாபக் கேடு. நாட்டில் எங்கே என்ன பிரச்னை வந்தாலும் இன்றைக்கு நாட்டை ஆள்பவர்கள், உடனே வரி ஏற்றி சமாளிக்க முடியும் என்றால் அதற்கு நாமே நாட்டை ஆண்டு வரிகளை போட்டுக் கொண்டு வாழ்ந்துக் கொள்ளலாமே? எதற்கு இந்த அரசியல்வியாதிகள்? அம்பானி, மல்லையா போன்றவர்கள் தொழிலில் நஷ்டம் என்று கூக்குரல் எழுப்பினால், காங்கிரஸ் அரசு உடனே அவர்களை நமது வரி பணத்தைக் கொண்டு காபாற்ற வருந்திக் கட்டிக் கொண்டு இறங்கும். 
பரமக்குடியிலிருந்து அனுப்பிய மெயிலில் கூறியிருப்பதாவது
     திரு .சிதம்பரம்தான். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியில் சொல்வதானால் எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறாரே அவ்வளவு நல்லவரா என்று யாரும் தப்பாக எடுத்துவிடாதீர்கள்.வரி கொடுப்பவனுக்கு அதிக வரி போடுவதும், வரி கொடுக்காமல் சம்பாதிப்பவனை பார்த்துக் கொண்டு சும்மாயிரு என்பதும் காங்.அரசின் நீண்ட கால கொள்கை.அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல்பட்ட அரசியல்வாதிகள் பலர் பொறுப்பிற்கு வந்த சில ஆண்டுகளில் மலைக்க வைக்கும் சொத்துக்களுக்கு அதிபதியாவது நம் நாட்டின் சாபக்கேடாகும்.அதனை திறமை என்றும் சாதனை என்றும் வாய் பிளந்து பாராட்டுகிறோமே தவிர எப்படி இது சாத்தியம் அப்படி என்ன தொழில் செய்தீர்கள் இவ்வளவு வருமானம் வருவதற்கு என்று சம்பந்தபட்ட அரசியல்வாதியின் சட்டையை பிடித்து உலுக்கி கேட்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது.                                                                                                                     ....தினமலர் 

No comments: