Sunday 22 June 2014

மோடி அரசின் தாக்குதல் - சிலிண்டர் விலை உயர்கிறது.

ரயில் கட்டண உயர்வு அறிவிப்பைத்தொடர்ந்து நாட்டு மக்கள் மீது அடுத்தஅதிரடித் தாக்குதலாக சமையல் எரிவாயு விலையை உயர்த்த மோடி அரசுதிட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை மாதத் துவக்கத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பெரும்துயரத்திற்கு உள்ளாகியிருக்கும் மக்கள்,மோடி அரசு பதவியேற்றதால்மாற்றம்ஏற்படும் என்று எதிர்பார்த்தனர். இந்த எதிர்ப்பை பொய்யாக்கும் விதத்தில் ரயில் கட்டணங்களை அதிகரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் 10 ரூபாய் உயர்த்துவதுஎன மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மானியம் இல்லாத சமையல்எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.905 ஆக உள்ளதுமானியத்துடன் கூடிய சிலிண்டர் விலைரூ.414 என்ற விலைக்கு வழங்கப்படுகிறது. மானியத்து டன் கூடிய சிலிண்டர் ஆண்டொன்றுக்கு 12 மட்டுமேஎன்ற அளவில் தொடர்கிறது. இந்நிலையில் எரிவாயுவிற்கு வழங்கப்படும் மானியத்தால் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக முந்தையகாங்கிரஸ் கூட்டணி அரசைப் போலவே மோடி அரசும் கூறத்துவங்கியுள்ளது. இதனை ஈடுகட்ட, மாதந்தோறும் சிலிண்டர் விலையை ரூ. 10 வீதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, ஏற்கெனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது என அறிவித்து அமலாக்கியதைப் போன்றதேஆகும். சந்தை நிலவரம் என்ற பெயரில்இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒரேமுறையில் அதிக அளவு உயர்த்தினால்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புஎன்று எண்ணி ஒவ்வொரு மாதமும்ரூ. 10 வீதம் தவணை முறையில் உயர்த்துவது என அரசு ஆலோசித்து வருகிறது.இதன் விளைவு, ஒரு வருட இறுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போதைய விலையைவிட ரூ.120 அதிகரித் திருக்கும்.நூதனமான முறையில், அதே நேரத்தில் பகிரங்கமாக மக்கள்மீது ஒரு மிகப்பெரும் தாக்கு தலுக்கு மோடி அரசு தயாராகி வருகிறது.அநேகமாக பட்ஜெட் தாக்கலின்போது இந்த உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நாடாளுமன்றத்தைஎதிர்கொள்ளாமல் அதற்கு முன்பே கூட அரசு அறிவிப்பை வெளியிடவும் கூடும் என்றும் தகவல்கள் கூறு கின்றன.

No comments: