Saturday 7 June 2014

நீதியரசர்V.R கிருஷ்ணய்யர்100- வது பிறந்தநாளை முன்னிட்டு,

 உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு எழுதிய லிவ்விங் லெஜண்ட் அண்ட் லேபர் ஜூரிஸ்புருடன்ஸ் என்ற புத்தகத்தை, மதுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டு விழா.
நீதி வழங்கும் பணி என்பது சாதாரணமானதல்ல. முனைப்புடன் வேலை செய்யும் நீதிபதிகள் இருதரப்பு வாதங்களை வைத்து மட்டும் நீதி வழங்குவதில்லை. வேறு சில காரணிகளும் அதற்கு உண்டு. அதை சில நேரம் பதிவு செய்ய இயலாது. சட்டத்தை மீறி ஆழ்மனதில் ஒரு எண்ண ஓட்டம் இருந்து கொண்டிருக்கும். அந்த எண்ண ஓட்டத்தில் இருந்து மனிதன் தப்பிக்க முடியாது.
எம்.எல்.., அமைச்சர், சட்டக்கமிஷன் உறுப்பினர், நீதிபதி என பல பணிகளை ஆற்றியவர் கிருஷ்ணய்யர். எல்லோரும் காலத்தின் குழந்தைகள். காலமானது, நமது எண்ணம், சிந்தனை, கருத்தியல்களை செப்பனிடுகிறது.நீங்கள் ஒரு புள்ளியில் வாழ்க்கையைத் தொடங்கினாலும், உலகம் மாறுபட்ட கருத்துகளை உங்கள் முன்னே வைக்கிறது. அந்த கருத்துகளை நீங்கள் பின்பற்றும்போது, அதில் முரண்பாடு கிடையாது. அதுவும் வளர்ச்சிதான். இந்த வளர்ச்சியை புரிந்து கொள்ள சமூகத்துக்கு பல காலமாகிறது.நீதியரசர் கிருஷ்ணய்யருக்கு வசதியும் இருந்தது. பல தளங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அவரது அனுபவம் அவரை செதுக்கியது. சுயஉதவிக்குழு திட்டத்துக்கு முன்பே சிரமதான் திட்டத்தை அவர் கொண்டு வந்தார். ஒரு நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவரது பல தீர்ப்புகள் முன் உதாரணமாக இருக்கின்றன.சட்ட விளக்கம் கொடுக்கும்போது, அரசியலமைப்பை இதயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பார் அவர். தீர்ப்பு வழங்கும்போது குழப்பம் ஏற்பட்டால், அது ஏழைக்கு உதவுமா என பரிசோதனை செய்து பார்த்து, ஆம் என்றால் அதுதான் சரி என்றார்.
பல்வேறு மொழி இனத்தால் பிரிவுபட்டு நிற்கும் இந்தியாவில் மக்கள் உரிமைகளை நிலைநாட்டும் கடமை நீதிபதிகளுக்கு உள்ளது. நான் சொல்வதுதான் சரி என நினைப்பதை விட, மாறுபட்ட கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும்போது தான் வளர்ச்சியும் வரலாறும் படைக்க முடியும் என்பதை, இந்த நூல் விளக்குகிறது என்றார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நீதிபதி . செல்வம் பேசியது: சட்டக் கல்லூரியில் படித்தபோது, அரசியலைப்பு சட்டம் தொடர்பான கட்டுரையில் அம்பேத்கரின் கருத்துகளை பதிவு செய்ததால், மதிப்பெண் குறைந்தது. முன்ஷிப் பணிக்கான நேர்காணலில் சிறந்த அரசியல் மேதை ஒருவரின் பெயரை கேட்டதற்கு, வழக்குரைஞர் ஒருவர் அம்பேத்கர் பெயரை கூறியதால், அவருக்கு பணி கிடைக்கவில்லை.
புரட்சியான கருத்துகளையும், வரலாறுகளையும் மேடைகளில் பேசுவதை விட, நீதித் துறையில் உள்ள குறைபடுகளை முதலில் களையவேண்டும் என்றார்.
நூலாசிரியர் கே. சந்துரு: தொழிலாளர்களுக்காக நீதியரசர் கிருஷ்ணய்யர் பிறப்பித்த தீர்ப்புகளை நீதிபதிகள் சிலர் புரிந்து கொள்ளவில்லை. சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், அவரது தீர்ப்புகள் பெரிய அளவில் நூல்களாக வெளிவரவில்லை என்றார்.
தொடர்ந்து, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வாழ்த்திப் பேசினார். சோக்கோ அறக்கட்டளை இயக்குநர் மகபூபாஷா வரவேற்றார். துணை இயக்குநர் எஸ். செல்வகோமதி நன்றி கூறினார். இந் நிகழ்ச்சிக்கு நமது மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ், மாவட்டச் செயலர் எஸ்.சூரியன், கிளைச் செயலர் தோழர்.எம்.சிவராமன், முன்னாள் மாவட்டத் தலைவர் தோழர்.எம்.சௌந்தர் உட்பட, வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் என நூற்றுக்கனக்கானோர் கலந்துகொண்டனர். 

No comments: