Sunday 14 June 2015

மக்களின் காப்பீட்டுப் பணம் ரூ.1500 கோடி அபேஸ்-அந்நிய அணு சக்தி கம்பெனிகளுக்கு மோடி அரசு தாராளம்

அணு உலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் வெளி நாட்டு அணு சக்தி கம்பெனிகள் நட்ட ஈடு அளிக்கும் சுமையை குறைப்பதற்கு உதவிடும் வகையில் இந்திய மக்களின் காப்பீட்டு பணத்தில் 1500 கோடி ரூபாய் மதிப்பில் சேமிப்புத் தொகுப்பை மத்திய அரசு தொடங்கியுள்ளது.முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு அமெரிக்காவுடன் அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டு அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்காக பொறுப்புடமைச் சட்டம் என்ற பெயரில் சட்டமொன்றை இயற்றியது. இச்சட்டத்தின் படி, அணு உலை அளிக்கும் அந்நியக் கம்பெனிகள் விபத்து ஏற்பட்டால் அதற்காக நட்ட ஈடு அளிக்க வேண்டும் என்றிருந்தது. அதனால் இந்த சட்டத்தை இயற்றினால் அணு உலைக் கம்பெனிகள் நட்டம் அடையும் என்று கூறி இச்சட்டத்தை திருத்த வேண்டும் என்று அமெரிக்கா இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளித்து வந்தது.இந்த நிர்ப்பந்தத்திற்கு அடி பணிந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இச்சட்டத்தை கம்பெனிகளுக்கு ஆதரவாக திருத்தியது. இத்திருத்திய சட்டத்தின்படி அந்நியக் கம்பெனி
ளின் நட்ட ஈடு சுமையை குறைக்கும்  முகமாக நாட்டின் காப்பீட்டுத் துறையில் பல ஆயிரம் கோடி மக்களின் காப்பீட்டு பணத்தை ஒதுக்கி ஒரு சேமிப்பு தொகுப்பாக உருவாக்கி அதைக் கொண்டு, விபத்துஏற்பட்டால் அப்போது பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி தற்போதைய மோடி அரசு 1500 கோடி ரூபாய் மதிப்பில் காப்பீட்டு சேமிப்பு தொகுப்பை உருவாக்கியுள்ளது.இது தொடர்பாக தில்லியில் பத்திரிகையாளர்களிடம் சனியன்று பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங், “1500 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த காப்பீடு சேமிப்பு தொகுப்பு ஜெனரல்இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களும் மற்றும்தனியார் காப்பீடு கம்பெனிகள் உள்ளிட்டு 11 காப்பீட்டு கம்பெனிகள் இணைந்துள்ளன. இவற்றில் சேமிக்கப்பட்டுள்ள காப்பீட்டு பணம், விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட உள்ளது. இது அந்நிய அணு உலை கம்பெனிகளுக்கு நட்ட ஈடு சுமையை குறைக்கும். அது மட்டுமின்றி சட்டத்தி லுள்ள இந்த பிரிவினால் அந்நிய அணு உலை கம்பெனிகள் முதலீடுகளை செய்வதற்கு உள்ள தடை களை நீக்கும்” என்றார் . (PTI)

No comments: