Thursday 11 June 2015

வாழ்வைப் பறிக்கும் சாலைப் போக்குவரத்து சட்டத்திருத்த மசோதா - மோடி அரசைக் கண்டித்து டூவீலர் மெக்கானிக்குகள் கடையடைப்பு

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடிஅரசைக் கண்டித்து இருசக்கரவாகனம் பழுதுபார் ப்போர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.நாடு முழுவதுமுள்ள இருசக்கர, நான்குசக்கர வாகன பழுதுபார்க்கும் சிறு நிறு வனங்களே இருக்கக்கூடாது; பஞ்சர் பார்க்கும் கடை தொடங்கி, இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் நடத்தும் கடை என அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரு முதலாளிகளுமே நடத்த வேண்டும் என உத்தரவிடும்விதமாக, மத்திய ஆட்சியாளர்களின் நாசகர, நயவஞ்சக திட்டத்திற்கு எதிராக இருசக்கர வாகனங்கள் பழுதுபார்ப்போர் புதனன்று தங்களது கடைகளை அடைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி ராப்பள்ளி மாவட்டம் முசிறியில் இருசக்கரவாகன பழுது பார்ப்போர் நிறுவனங்களை மூடினர்.மதுரையில் இருசக்கர வாகன பழுதுபார்க் கும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட் டிருந்ததாக கூடல்நகரை அடுத்துள்ள சாந்திநகரில் கடை வைத்துள்ள துளசிமணி தெரி வித்தார். அவர் கூறுகையில், மதுரையில் மட்டும் 4 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடைக்கு சீனியர் மெக்கானிக், இரண்டு உதவியாளர்கள் என கணக்கிட்டால் 12 ஆயிரம் பேர் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த எங்களது போராட்டம் தொடருமென்றார்.

No comments: