Tuesday 2 June 2015

மல்யுத்தம்: இந்தியாவுக்கு 8 தங்கம் . . .

இத்தாலியில் நடந்த சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு 8 தங்கம் கிடைத்தன.
இத்தாலியில் சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில்பிரீஸ்டைல்பிரிவில் அபாரமாக செயல்பட்ட இந்தியாவின் சோனு (61 கி.கி.,), சோம்விர் (86 கி.கி.,), மாவ்சம் காத்ரி (97 கி.கி.,), ஹிதேந்தர் (125 கி.கி.,) ஆகியோர் பைனலில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
முன்னதாக இந்தியாவின் யோகேஷ்வர் தத் (65 கி.கி.,), பிரவீண் ரானா (70 கி.கி.,), அமித் குமார் (57 கி.கி.,), நர்சிங் யாதவ் (74 கி.கி.,) தங்கம் வென்றனர். ‘பிரீஸ்டைல்’ 65 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் ராஜ்னீஷ் வெண்கலம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் இந்தியாவுக்கு 8 தங்கம், ஒரு வெண்கலம் உட்பட 9 பதக்கங்கள் கிடைத்தன.

No comments: