Monday 1 June 2015

சேவை வரிச் சட்டம் இன்று அமல் விலைவாசி கடுமையாக உயரும்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் (ஜிஎஸ்டி) ஜுன் 1 திங்கள் முதல் அமலாவதை தொடர்ந்து ஓட்டல்கள், மொபைல் சேவை, ரயில் டிக்கெட் உள்ளிட்ட எண்ணற்ற சேவைத்துறைகளின் கட்டணம் கடுமையாக உயருகிறது. இதுதொடர்பாக ஞாயிறன்று தில்லியில் மத்திய அரசின் மூத்த அதிகாரி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது-மத்திய அரசு சேவை வரிச்சட்டத்தை ஜூன் முதல் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளதால் ஓட்டல்கள், மொபைல் சேவைகள், ரயில் கட்டணங்கள், விமானக் கட்டணம், வங்கிச் சேவைகள், காப்பீடு, சேவை விளம்பரங்கள், கட்டிடக் கலைகள், கட்டுமானத் துறை, கடன் அட்டைகள், நிகழ்ச்சி மேலாண்மைச்சேவைகள் மற்றும் சுற்றுலா கம்பெனிகள் ஆகியவற்றின் மீது புதிய வரி விதிக்கப்படும்.இதனால் இச்சேவைகளை பயன்படுத்துபவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும், இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.சேவை வரிச்சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தும் பாஜக அரசு அதை கொண்டு வந்துள்ளது. பெரிய பன்னாட்டு கம்பெனிகள் கார்ப்பரேட்டுகளுக்கு இதில் விதி விலக்குகள் அளிக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.நாடு முழுவதும் பல கோடி மக்கள் ஓட்டல்கள், காப்பீடு, வங்கி போன்ற சேவைகளை பயன்படுத்தியும் இவற்றை சார்ந்துமே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஓட்டல்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படுவதால் உணவுப்பண்டங்களின் விலையும் ஏற்றப்படும். இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் சாதாரண பொருட்கள் முதல் ரயில் கட்டணம் வரை  சாமான்ய மக்களுக்கு செலவு  அதிகரிக்கும். காய்கறி, மளிகை பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலே விலையை உயர்த்தி விடுகின்றனர்.  
* காய்கறி, மளிகை பொருட்கள் விலை அதிகரிக்கும்.
*
சில வகை பாக்கெட் உணவுகள் விலை உயரும்.
*
ரயில் முதல் வகுப்பு, ஏசி வகுப்பு கட்டணம்
*
ஓட்டலில் காபி சாப்பிட்டால் கூட கசக்கும்.
*
அதுபோல, ஓட்டலில் அறை எடுத்து தங்கினாலும் பில் எகிறும்.
*
பல பேரும் அன்றாடம் செய்யக்கூடிய மொபைல் ரீசார்ஜ் இனி பர்சை கடிக்கும்.
*
கிரெடிட் கார்டு பில் ஏற்கனவே தலைசுற்றும்; இப்போது ஓசைப்படாமல் வரி உயர்வு நுழைந்து விடும்.
*
சுற்றுலா சென்றாலும், பொழுதுபோக்கு பூங்கா போனாலும் கட்டணம் உயரும்.
*
மருந்து பொருட்கள், ஆட்டோமொபைல் செலவுகள் இனி அதிகமாகும்.
*
வீடு வாங்கினாலும், மனை வாங்கினாலும் இந்த வரி  உயர்வும் கூட வரும்.
*
திருமண செலவுகளிலும் இந்த வரி உயர்வு இருக்கும். மண்டப செலவிலும் எதிரொலிக்கும்.
*
பெண்களின் பியூட்டி பார்லர் செலவு, இனி சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை விழுங்கும்.

No comments: