Wednesday 9 September 2015

அக். 1 முதல் அதிவேக இணையதள சேவை BSNL வழங்குகிறது.

BSNL  நிறுவனம், அக்டோபர் 1 முதல் அதிவேக இணையதள சேவையை வழங்குகிறது. குறைந்தபட்சம் நொடிக்கு 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவையை BSNL. வழங்க உள்ளது. BSNL. தற்போது குறைந்தபட்சம் 512 கே.பி.பி.எஸ். வேகத்தில் இணைய தள சேவையை வழங்கி வருகிறது. ஆனால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணையதள சேவையின் வேகம், இதை விட அதிகம். இதனால், கடந்த சில ஆண்டுகளாக BSNL. வாடிக்கையாளர்கள், தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லும் நிலை உள்ளதுகடந்த ஆண்டு மார்ச் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரை 1 கோடியே 78 லட்சம் BSNL. செல்போன் வாடிக்கையாளர்களும், 20 லட்சம் BSNL. தொலைபேசி வாடிக்கையாளர்களும் தனியார் நிறுவனங்களை நோக்கிச் சென்று விட்டனர். இதனால் BSNL. நிறுவனத்திற்கு, ரூ. 7 ஆயிரத்து 600 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில் இணைய தள சேவைவேகத்தை அதிகரிக்கும் பணிகளை BSNL. நிறுவனம் தொடங்கி யுள்ளதுஇதனால், அக்டோபர் 1–ஆம்தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவையை BSNL. வழங்க உள்ளது. எனினும், வாடிக்கையாளர்கள் இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே அதிவேக இணையதள சேவையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments: