Thursday 10 September 2015

குஜராத்தில் 1.10 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்: NGO., தகவல்.

குஜராத் மாநிலத்தில் ஒருலட்சத்திற்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக என்.ஜி.. ஆய்வில் தெரிவி்க்கப் பட்டுள்ளது,
குஜராத் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் நாட்டின் 55 சதவீத தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்த விதை உற்பத்தி பிரிவில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் அனைவரும் 14 வயதுக்குட்பட்டவர்களாவர்.
இந்தியா முழுதிலும் உள்ள பருத்திவிதை உற்பத்தி பிரிவில் சுமார் 25 சதவீதம் அளவிற்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் ஆந்திரா தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த துறையில் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தில் 56.7 சதவீத குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் கைவி்ட்டவர்களாகவும், 34.3 சதவீதத்தினர் பள்ளிக்கு செல்பவர்களாகவும், சீசன் காலகட்டங்களில் முழு நேர தொழிலாளர்களவும் பணி புரிவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது குழந்தை தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் பிற்படுத்தப்பட் வகுப்பை சேர்ந்த குழந்தைகளும், தொடர்ந்து பிற இனத்தை சார்ந்த குழந்தை தொழிலாகளர்களாக பணி புரிந்து வருகின்றனர்.

No comments: