Friday 4 December 2015

தில்லியில் மாற்றுத் திறனாளிகள் மாபெரும் பேரணி...

உலக ஊனமுற்றோர் தினமான வியாழக்கிழமை (டிச.3) தலைநகர் தில்லி நாடாளுமன்ற வீதியில், நாடு முழு வதுமிருந்து வந்திருந்த தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம், புதுதில்லி ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசியமேடை உட்பட இருபதுசங்கங்களைச் சேர்ந்த 1000 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாபெரும் பேரணி-ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்கள்.2014ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டமுன்வடிவு 2014 மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் இன்னமும் நிலுவையில் உள்ளது. அதனை நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தி, இக்குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றுமாறு அவர்கள்இப்பேரணி-ஆர்ப்பாட்டத்தில் கேட்டுக்கொண் டார்கள்.
நிறைவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று உரையாற் றினார். பின்னர் பல்வேறு அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சர் தாவார் சந்த் ஜெஹ்லாத்தை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலி யுறுத்தி மனு கொடுத்தனர். பின்னர் மாலை குடியரசுத் தலைவரையும் சந் தித்தனர்.

No comments: