Saturday 15 February 2014

3ஜி சேவை தேனி, திண்டுக்கல் விரிவாக்கம். . .

பிஎஸ்என்எல்-ன் 3 ஜி சேவை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளதாக பிஎஸ்என்எல் மதுரை தொலைத்தொடர்பு வட்ட பொது மேலாளர் எஸ்..ராஜம் தெரிவித்தார்இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதுமதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை தொலைத்தொடர்பு வட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் நகரங்களிலும், கொடைக்கானலிலும் 3 ஜி சேவை உள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இச் சேவை வெள்ளிக்கிழமை (பிப்.14) அறிமுகம் செய்யப்படுகிறது. பிப்.24 இல் ஆண்டிப்பட்டி, நாகமலை புதுக்கோட்டை பகுதிகளுக்கும், அதன் தொடர்ச்சியாக சின்னாளபட்டி, ஒட்டன்சத்திரம், கம்பம், பெரியகுளம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
  மதுரை தொலைத்தொடர்பு வட்டத்தில் 6 லட்சம் செல்போன் இணைப்புகள் உள்ளன. மதுரை நகரில் செல்போன் சேவையை மேலும் மேம்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்படுகின்றன. மொத்தம் 567 செல்போன் கோபுரங்கள் உள்ளன. இந்த செல்போன் கோபுரங்களில் மதுரையின் வடபகுதியில் முழுமையாகவும், தென்பகுதியில் பெரும்பாலான இடங்களிலும் தொழில்நுட்பத் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு 14.4 எம்பிபிஎஸ் வரை அதிவேக 3 ஜி இணையதள சேவை வழங்க முடியும்தமிழகத்தில் உள்ள தொலைத்தொடர்பு வட்டங்களில், வருவாயில் மதுரை தொலைத்தொடர்பு வட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. கடந்த அக்டோபரில் இருந்து 100 நாள்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் மதுரை முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதேபோல, பிற சேவை நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு வருவோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வருவோருக்கு, ரூ.44-க்கு சிறப்புக் கட்டண வவுச்சர் இலவசமாக வழங்கப்படுகிறது. 3 ஜி டேட்டா கார்டு உடன் இணைந்து பயன்படுத்தக் கூடிய புதிய வகை பிராட்பேண்ட் மோடம் தற்போது வழங்கப்படுகிறது. கேபிள் பராமரிப்புப் பணிகளின்போதும் தடையின்றி இணையதள சேவையைப் பயன்படுத்தலாம். வீடுவரை கம்பி இழை தொழில்நுட்பத்தில் (எப்டிடிஎச்), மதுரை நகரில் 32 இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இணையதள சேவை வழங்க முடியும். இதில் தற்போது  20 பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 12 இடங்களுக்கு கொடுக்க முடியும். இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

No comments: