Sunday 16 February 2014

சிதம்பரத்திற்கு,கேள்வி: ரூ.3 லட்சம் கோடி எங்கே போனது?

வங்கி ஊழியர்களுக்கு, இரண்டு ஆண்டுகளாக சம்பள உயர்வு தர மறுக்கும் வங்கி நிர்வாகங்கள், தங்களின் லாபத்திலிருந்து, வராக்கடன் தொகை, 3 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளன' என, வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.சம்பள உயர்வு கோரி, நேற்று முன்தினமும், நேற்றும், நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
10சதவீதஊதியஉயர்வு:
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன், வங்கி ஊழியர் சங்கத்தினர், மத்திய அரசு மற்றும் வங்கிகளை நடத்தும் நிர்வாகங்களுடன், ஊதிய உயர்வு கோரி, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க, வங்கிகளின் சங்கம் முன்வந்தது. அதை ஏற்க மறுத்த ஊழியர் சங்கத்தினர், கூடுதலாக தர வேண்டும் என, வலியுறுத்தினர். இருதரப்பு பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்படாததை அடுத்து, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம், பத்திரிகையாளர்களை சந்தித்த, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம், 'வங்கிகளுக்கு கிடைக்கும் லாபம் முழுவதையும், ஊழியர்கள் சம்பளத்திற்காக வழங்க முடியாது. வங்கிகளின் முதலீட்டாளர்களுக்கு பங்காதாயம் வழங்க வேண்டும். அது போல், பல நிர்பந்தங்கள், வங்கி நிர்வாகங்களுக்கு உள்ளன' என, தெரிவித்திருந்தார்.இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான, ..பி. .சி.,யின் துணைத் தலைவர், கே.அனந்தகுமார் கூறியதாவது:எங்களுக்கு, 10 சதவீத சம்பள உயர்வு தர, வங்கிகளின் நிர்வாகங்கள் முன்வந்தன. அதனால், 3,115 கோடி ரூபாய் செலவாகும். எங்களுக்கு, 100 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முன்வந்தால் கூட, 31 ஆயிரம் கோடி ரூபாய் தான் செலவாகும்.ஆனால், பல லட்சம் கோடி ரூபாயை, லாபமாக சம்பாதிக்கும் வங்கிகள், நாங்கள் எதிர்பார்க்கும் சம்பள உயர்வை வழங்க மறுக்கின்றன.கிடைக்கும் அபரிமிதமான லாபத்தின் ஒரு பகுதியை, வராக்கடன்களை செட்டில் செய்வதற்கும், கடன்களை தள்ளுபடி செய்வதற்கும், வங்கி நிர்வாகங்கள் பயன்படுத்துகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
லாபபணம்வீண்:
வங்கி ஊழியர் சங்கமான, ..பி..., பொதுச் செயலர், சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:வங்கிகளின் லாபத்தை, ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்க முடியாது என, அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
கடன்கள் தள்ளுபடி:
ஆனால், கடந்த, ஆறு ஆண்டுகளில், 1.41 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த, ஐந்தாண்டுகளில், வராக்கடன் என்ற வகையில், 1.40 லட்சம் கோடி ரூபாய் சரி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில், மூன்று லட்சம் கோடி ரூபாய், வங்கிகளின் லாபம், எங்கோ சென்றுள்ளது. ஆனால், எங்களுக்கு சம்பள உயர்வு தர மறுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments: