Friday 14 February 2014

மதுரை மாவட்ட ஆட்சியகரத்தில் BSNLமேளா . . .

மதுரை மாவட்டத்தில் 6.50 லட்சம் BSNLப்ரிபைட் வாடிக்கையாளர்கள் உள்ளதாக BSNLஉதவிப் பொது மேலாளர் காளியப்பன் கூறினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று BSNLமேளா காளியப்பன் கூறியதாவது.
மதுரை மாவட்டத்தில்  BSNL சேவைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்காக இந்த மேளா வியாழன்,வெள்ளி கிழமைகளில் நடைபெறுகிறது.இலவச சிம்கார்டு பொதுமக்களுக்கு வழங்கப் படுகிறது.இது தவிர 3 G டேட்டா கார்டு,புதிய தொலைபேசி இணைப்பு,பிராட்பேண்டு இணைப்பு ஆகியவை உடனுக்குடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் BSNLலில் 6.50 லட்சம் பேர் வாடிக்கயாலர்காலாகச் சேர்ந்துள்ளனர். மாதம் தோறும் 10 ஆயிரம் பேர் புதிதாக இணைகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

BSNL மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தின் பொது மேலாளர் திருமதி.S.E.ராஜம்,துனைபொது மேலாளர் திரு.சேவியர்,BSNL ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எஸ்.சூரியன்,மாவட்டத்தலைவர் சி .செல்வின் சத்தியராஜ், மாவட்ட உதவிச் செயலர் ஆர்.ரவிச்சந்திரன்,மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகளும்,ஊழியர்களும்,அதிகாரிகளும் இந்த மேளாவில் இருந்தனர்.   ---தீக்கதிர் நாளிதழ் 

No comments: