Friday 14 February 2014

செய்தி . . . .துளிகள் . . .

சென்னை சொசைட்டி செய்திகள்:
சாதாரண கடன் ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.   வருகிற மார்ச் 3 முதல் கடன் வழங்கப்படும்.   கடன் வேண்டுபவர்கள் முன்னதாகவே விண்ணப்பப் படிவம் கொடுத்து காத்திருப்பது நல்லது.  
சென்னை சொசைட்டி RGB
வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் நாள்:19-02-14
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள்: 21-02-14
தகுதியான வேட்பு மனு அறிவிக்கும் நாள்:        24.02.14
வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்:    25 to 27.02.14
இறுதிப் பட்டியல் அறிவிக்கும் நாள்:                 28.02.14
03.02.2014 அன்று வரை உறுப்பினர்களாக உள்ளவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள்குறைந்த பட்சம் ஓராண்டு உறுப்பினர்களாக உள்ளவர்கள் போட்டியிட  தகுதியானவர்கள்
வாக்காளர் பட்டியல் 07.02.2014 முதல் ரூபாய் 100 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.
வேட்புமனு படிவம் ( Nomination form ) 07.02.14 முதல் சொசைட்டி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்
 மதுரை SSA பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மொத்த RGB க்கள்: 4 ஆகும்.
இயக்குநர்கள் நியமனம் 
BSNL நிறுவனத்திற்கு இயக்குநர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என இலாக்கா அமைச்சருக்கு  எழுதிய கடிதத்தின் விளைவாக திரு.AN.ராய் (DIRECTOR HR) - மனிதவள இயக்குநராகவும் திரு.அனுபம் ஸ்ரீவத்சவா - (DIRECTOR FINANCE) - நிதி இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளனர்.தோழர்.குருதாஸ் MP அவர்களின் தலையீடு பாராட்டிற்குரியது.
JCM மாநிலதலமட்டக்குழு உருவாக்கம் 
சில இடங்களில் NFTE  மற்றும் BSNLEU சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் தலமட்டக்குழு அமைப்பதில் தாமதம் உருவானது. ஏதேனும் ஒரு சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இருந்தால் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தலமட்டக்குழுவை அமைத்துக்கொள்ளலாம் என BSNL நிர்வாகம் 13/02/2014 அன்று உத்திரவிட்டுள்ளது
கருணை அடிப்படை வேலை 
கருணை அடிப்படை வேலைக்கான பரிசீலனையில் 2007க்கு முன் கணக்கீடு செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை (PREREVISED PENSION  BEFORE  2ND PRC) கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என 22/10/2013 அன்று BSNL நிர்வாகம் வெளியிட்ட உத்திரவை வலியுறுத்தி கேரள மாநில நிர்வாகத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.கருணை அடிப்படைக்கான விதிமுறைகள் இன்னும் வெகுவாக தளர்த்தப்பட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர் நலத்திட்டங்கள் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லைஅதுவும் குறித்த தேதியில் தரப்படுவதில்லைஅவர்களது வைப்பு நிதிக்கணக்கு EPF துவக்கப்படுவதில்லை.மருத்துவ சிகிச்சைக்கான ESI அட்டை வழங்கப்படுவதில்லை.விடுப்பு, சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை.இதனை உடனடியாக தலமட்டங்களில் அமுல்படுத்தக்கோரி.BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு வழக்கம் போல் அறிவுறுத்தியுள்ளது.

No comments: