Friday 7 February 2014

TNTCWU - அமைப்புதினத்தில் . . .

“நிரந்தரமாகவே தற்காலிகமா?“
தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் அமைப்புதினத்தில் 
ஆண்-பெண் ஊழியர்கள் ஆவேச முழக்கம்!
புதுக்கோட்டை பிப்.7 – இங்குள்ள தொலைத்தொடர்பு அலுவலகத்தில் காலை 10மணியளவில், ஒப்பந்த  தொழிலாளர் அமைப்புதினத்தை ஒட்டி, கொடியேற்றுவிழாவுடன் வாயிற்கூட்டமும் நடத்தப்பட்டது. அதில் பேசிய ஊழியர் சங்கத்தினர், “நிரந்தரமாகவே தற்காலிகமா? என்று முழக்கமெழுப்பி தற்காலிக ஒப்பந்த ஊழியரை நாடுமுழுவதும் நிரந்தரப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
      1999ஆம்ஆண்டு பிப்ரவரி 7ம்தேதி திண்டுக்கல்லில் தொடங்கப்பட்ட சங்கத்தின் அமைப்புதினம், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுவதன் ஒருபகுதியாக, புதுக்கோட்டை தொலைத்தொடர்புக் கோட்ட அலுவலக வாயிலருகில் நடந்த கூட்டத்திற்கு தொலைத்தொடர்பு ஊழியர்சங்கக் கிளைத்தலைவர் கே.நடராஜன் தலைமையேற்றார். ஒப்பந்தத் தொழிற்சங்க மாவட்டத்துணைச்செயலர் விசுவநாதன், ஊழியர்களின் பலத்த கரவொலிக்கிடையே சங்கக் கொடியை ஏற்றிவைத்தார்.
      தொலைத்தொடர்பு ஊழியர்சங்க மாவட்டத் துணைத்தலைவரும் BSNL உழைக்கும் மகளிர் திருச்சிக் கோட்ட ஒருங்கிணைப்பாளருமான எம்.மல்லிகா, புதுக்கோட்டைக் கிளைச்செயலர் பி.ஆறுமுகம், ஒப்பந்தத் தொழிற்சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கல்லடியான், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர். அவர்கள் உரையில், நாடுமுழுவதும் உள்ள தற்காலிக ஒப்பந்த்த் தொழிலாளரை நிரந்தரப் படுத்தவேண்டும் என்றும், சமவேலைக்கு சமஊதியம் என்னும் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசு, ஒப்பந்த ஊழியரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த்துடன் முழக்கங்களையும் எழுப்பினர்.  துணைச் செயலர் ஜாக்கப் ஜான்சன் நன்றி கூறினார்.
      கூட்டத்தில் தொலைத்தொடர்புத் துறை பெண் ஊழியர் பலர்  உட்பட ஏராளமானோர் கலந்துகொணடனர்.  

No comments: