Friday 16 May 2014

18.05.14 ஞாயிறு ... நடக்க இருப்பவை . . .

அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம் .  .  .அவசியம் வாங்க....
நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் 18.05.14 அன்று மாலை 3 மணிக்கு மதுரையில் உள்ள நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், நமது மாவட்ட தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
                    24.05.14 அன்று பழனியில் நடைபெறவிருக்கும் நமது மாவட்ட செயற்குலுவிற்கு முன்பாகவும், இன்றைய அளவில் நமது மதுரை மாவட்டத்தில் நிலவிவரும் சூழ்நிலைகள்,நாம் சந்தித்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் குறித்தும் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் உடனடியாக விவாதிக்க வேண்டியுள்ளது. எனவே, நமது மாவட்ட சங்க நிர்வாகிகளும், மதுரை நகரத்தில் உள்ள கிளைச் செயலர்களும் 18.05.14 மாலை 3 மணிக்கு,நமது சங்க அலுவலகத்தில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில்   அவசியம் கலந்து கொள்ள வேண்டுமாய் மாவட்ட மையம் அன்புடன் அழைக்கின்றது.
--- என்றும் தோழமையுடன் ... எஸ். சூரியன் --D/S-BSNLEU

No comments: