Friday 9 May 2014

திண்டுக்கல் D.E பாரபட்ச போக்கை மாற்றக்கோரி . . .

அருமைத் தோழர்களே !ஆண்டுக்கொருமுறை திண்டுக்கல்லில் செக்க்ஷன் மாற்றல் நடைபெறும், இது வழக்கமான ஒன்றுதான் . ஆனால், திண்டுக் கல்லில்  தற்போது  D.E-யாக  பொறுப்பேற்றது முதல் பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய  அதிகாரியே, சிறு சிறு பிரச்சனைகளில் கூட காலதாமதம் செய்வதும், ஒரு சிலருக்காக சார்புநிலை எடுப்பதும் மிகவும்,சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 
சாதரணமாக, செக்க்ஷன் மாற்றலில் எத்தனை இடங்கள் உள்ளது,அந்த இடங்களுக்கு இன்னார்,இன்னார் உள்ளனர் என்பதை அலுவலக அறிவுப் பலகையில் அறிவிப்பதற்கு மாறாக, மாவட்ட நிர்வாகத்திடம் தேவையற்ற முறையில் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதை கணக்கில் கொண்ட D.E/DDG விளக்கம் கேட்டதே அடிப்படையில் தவறாகும்.
இப்பிரச்சனை நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு, நமது திண்டுக்கல் கிளைச் சங்கம் தெரிவித்தவுடன் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விவாதித்ததின் அடிப் படையில்  DGM(HR) உடனடியாக D.E/DDG அவர்களை அழைத்து தனி ஒருவருக்கு  மட்டும் விதிவிலக்கு அளிக்கவேண்டியதில்லை, அனை வரையும் கவுன்சிலில் கொண்டு வரவேண்டும் என்று வழிகாட்டினார்.
அதனடிப்படையில் D.E/DDG நமது கிளச்சங்கத்திடம் யாருக்கும் விதிவிலக்கு இருக்காது என உறுதியளித்தவர், கவுன்சிலுக்கான பட்டியல் வெளியிடும் போது, ஒருவரை மட்டும் வேண்டுமென்றே விடப்பட்டதை நமது கிளச்சங்கம் கூட்டணி சங்கத்துடன் இணைந்து D.E/DDG அவர்களிடம் முறையிட்டனர். இப்பிரச்சனை முறையாக தீர்க்கப்படவில்லை யெனில் கூட்டாக தொழிற்சங்க இயக்கத்திற்கு செல்வோம் என கடிதமும் கொடுக்கப்பட்டு நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டது.
ஆனால், கோட்ட நிர்வாகம் மீண்டும்,மீண்டும் தான்செய்யும் தவறை சரிசெய்து கொள்ளாமல்  முறையற்ற நிலை எடுத்ததின் காரணத்தால் திண்டுக்கல்லில் ஏற்கனவே, அறிவித்தபடி 09.05.2014 அன்று மாலை 5 மணிக்கு  கண்டன ஆர்ப்பாட்டம் மிக சக்தியாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 7 பெண்கள் உட்பட 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டதை நமது மதுரை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
நடை பெற்ற ஆர்பாட்டத்தில்,கூட்டுத் தலைமையாக தோழர்கள், A.ஞான சுந்தரம், M. பழனிச்சாமி,P. ஜெயகிருஷ்ணன் செயல்பட்டனர்.BSNLEU & TEPU BEAUஆகியசங்கங்கள் சார்பாகதோழர்கள்,J.ஜோதிநாதன்,S.உதயசூரியன்,M.பழனிச்சாமி,S.பரிமளரெங்கராஜ்,A.வைத்திலிங்கபூபதி,S.ஜான்போர்ஜியாஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர்.A.குருசாமி நன்றிகூறினார்.
பாரபட்ச நிலைபாட்டை நிர்வாகம் தவிர்க்கவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டம்,19.05.2014அன்று தர்ணா  நடத்தப்படும் என்ற எச்சரிக்கை யோடுஆர்ப்பாட்டம்நிறைவுற்றது.போராட்டவாழ்த்துக்களுடன்,..
                     எஸ்.சூரியன் -D/S-BSNLEU.

No comments: