Friday 30 May 2014

மே -30 சிஐடியு அமைப்பு தினம் . . .

1970ல் துவக்கப்பட்ட சிஐடியு இந்த மே 30ம் நாளோடு 44 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது.ஏகாதிபத்தியம், பன்னாட்டு மூலதனம், இந்திய ஏகபோகம், நிலபிரபுத் துவம் என சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்தவும், தொழிலாளி வர்க்கத் திற்கெதிரான தத்துவார்த்த தாக்குதலை எதிர்த்தும், இந்திய மண்ணில் சோசலிச சமுதாயத்தை உருவாக் கவும் உறுதி பூண்டு சிஐடியு செயல்பட்டு வருகிறது.
புதிய முறையில் உழைப்பு சுரண்டல்
உலகமயம்-தாராளமயம்-தனியார்மயசுரண்டல் முறை களுக்கு  மேலும் வலுவூட்டியுள்ளது. காண்ட்ராக்ட். கேசுவல், பதிலி, பயிற்சியாளர் என பல்வேறு பெயர்களில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல் வேகப் படுத்துவதோடு, நடைமுறையில் உள்ள ஊதிய விகிதம் கூட மறுக்கப்படுவது பரவலாக உள்ளது. அடுத்து சிறுகுறுநடுத்தரத் தொழில்கள் நலிவடைவதும், மூடப்படுவதும் நடந்தவண்ணமுள்ளன. உரிய இழப்பீடுகூட இல்லாமல் தொழிலாளர்கள் இந்தத் தொழில்களில் வேலையிழந்துள்ளனர்.எல்லாத் தொழில்களிலுமே இயந்திரங்கள் நவீனப்படுத்தல் காரணமாக வேலையிழப்பு நடக்கிறது. ஹூண்டாய் போன்ற கார் கம்பெனிகளில் ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் வேலையிழப்பு நடந்து வருகிறது. விரும்பினால் உள்ளேற்றுவது இல்லாவிட்டால் வெளியேற்றுவது என்ற கொள்கை சட்டப்பூர் வமாகாவிட்டாலும் ஏராளமான தொழிற்சாலைகளில் இது நடை முறையில் உள்ளது. ஹூண்டாய் கம்பெனியில் காண்ட்ராக்ட், கேசுவல் என்ற பெயரில் 13,000 பேர் வரை பணியாற்றினர்.
இப்போது எட்டாயிரம் பேர் தான் உள்ளனர். எலக்ட்ரானிக் கம்பெனியான நோக்கியாவில் பணியாற்றிய 25000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.சுயதொழில் செய்வோர் மற்றும் முறை சாராப் பிரிவினரும் கூட கடுமையான வேலையிழப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இதே போன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், பல்வேறு கொடுமைக்கு ஆளாக் கப்படும் பெண் தொழிலாளர்கள், குழந்தை உழைப்பாளர்களின் பிரச்சனைகளும் தொழிற்சங்க இயக்கத்தின் முன் உள்ள சவால்களாக தொடர்கின்றன.வேலையிழப்புகளும், புதிய வேலை வாய்ப்பின்மையும் போக்கப்படவேண்டு மானால் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் தேவை. காண்ட்ராக்ட் முறை ஒழிக்கப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 15 ஆயிரம் என்ற நிலை உருவாக்கப்பட்டாலே இந்திய பொருளாதாரத்தில் மலர்ச்சி ஏற்படும். முதலாளிகள் லாபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் இதை சொல்லத் தயங்காத அரசுவேண்டும். முதலாளித்துவ நாசகர கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் அலை அலையாய் போராட்டங்கள் வெடிக்கின்றன.
உரிமைகளை பாதுகாப்போம்
முதலாளித்துவ நாசகர கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் அலை அலையாய் போராட்டங்கள் வெடிக்கின்றன.இந்த சூழ்நிலையை உணர்ந்து,தொழிலாளிவர்க்க ஒற்று மையையும், தொழிற்சங்க ஒற்றுமை யையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கோடு தான் உலக தொழிற்சங்க சம்மேளனத்தோடு இணைந்து உலக தொழிலாளரே ஒன்றுசேருங்கள் என்ற கோஷத்தை இந்திய உழைப்பாளி மக்களுக்கு முன்னால் சிஐடியு முன்வைத்துள்ளது.இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முன்உள்ள இந்த முக்கிய கடமைகள்.... 
1. நாடு தழுவிய ஒன்றுபட்ட தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவது, 2.தேசிய அளவிலும், களத்திலும் தொழிற்சங்கங்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தி விரிவு படுத்துவது, 3. ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு எதிராக உள்நாட்டில் போராடுவது மட்டுமின்றி உலகம் தழுவிய தொழிலாளிவர்க்கப் போராட்டங்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவிப்பது, 4. வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்திக் கொள்கை உருவாக்கத்தில் தீர்மானகரமான மாற்றத்தை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. 1. குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000, 2.காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், 3.அங்கன்வாடி-டாஸ்மாக்-உள்ளாட்சி துறைகளில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு தொகுப்பூதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச பென் சன் ரூ. 4000, 4. காலிப்பணியிடங்களை பூர்த்திசெய்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, 5.முறைசாரா நலவாரியங்களை முறையாக செயல்படுத்துவது, பணப்பலன்களை இரட்டிப் பாக்குவது, 6. புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்வது, 7. தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்றுவது போன்ற தமிழக உழைப்பாளி மக்களின் கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும்........-தீக்கதிர் 

No comments: