Tuesday 27 May 2014

உ.பி.யில் ரயில் மீது எக்ஸ்பிரஸ் மோதி விபத்து: 40 பேர் சாவு?

உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயில் மீது கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந் திருக்கலாம்என்று அஞ்சப்படுகிறது.  இது குறித்து கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் பரத்லால் கூறுகையில், ""சந்த் கபீர்நகர் மாவட்டம் கலீலாபாத் அருகே சுராய்ப் ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டது. சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த அதே தண்டவாள த்தில் வந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியதில் ரயிலின் முதல் பெட்டி முழுவதுமாக உருக்குலைந்தது. உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறோம்'' என்றார். வடகிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அலோக் சிங் கூறுகையில், ""ரயில் தடம் புரண்டதே விபத்துக்கு காரணம். ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் புகுந்துள்ளன. அவற்றில் 4 பொதுப் பெட்டிகளும், 2 ஏசி பொருத்திய பெட்டிகளும் அடங்கும்'' என்றார்.ரயில்வே வாரியத் தலைவர் அருணேந்திர குமார் கூறுகையில், "விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது. வடகிழக்கு வட்டார ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பி.கே.பாஜ்பாய் தலைமை யிலான அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்துவர்' என்றார்.
இந்த விபத்தால் தில்லி மற்றும் கோரக்பூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டதாகவும், ரயில்கள் மாற்று வழியாக இயக்கப்பட்டதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

No comments: