Friday 17 April 2015

தீவிரமடையும் சத்துணவு ஊழியர் போராட்டம்17.04.15 மறியல்.

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. வியாழனன்று தமிழகம் முழுவதும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய சத்துணவு ஊழியர்கள், வெள்ளியன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி மாநிலப் பொதுச் செயலாளர் சி.ராமநாதன் ஆகியோர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் 15 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஏப்ரல் 16 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 35,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.ஏப்ரல் 17 வெள்ளியன்று தமிழகம் முழுவதும்மாவட்டத் தலைநகரில் சிறை நிரப்பும் மறியல்போராட்டம் நடைபெறவுள்ளது.இப்போராட்டத் தில் 50,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.தமிழக அரசு, அதிகாரிகளைப் பயன்படுத்தியும், துறை அமைச்சர் நேரடியாக ஈடுபட்டும் சத்துணவு மையங்களின் பூட்டை உடைத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்துவிட்டு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளைச் சொல்லி நிரந்தர பணி நீக்கம், தற்காலிக பணிநீக்கம் என ஊழியர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். வேலை நிறுத்தப் போராட்டத்தில் பாதிப்பில்லை என்றும் அமைச்சர் உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். “கோரிக்கையில் நியாயம் இல்லைஎன அரசு செயலாளர் கருத்துதெரிவித்துள்ளார். இது போராட்டக் களத்தில் உள்ள ஊழியர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் நாளுக்குநாள் எழுச்சியோடு, அதிகஎண்ணிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் கோரிக்கையின் நியாயங்களை உணர்ந்து பேசித் தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
--- சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள் , எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: