Wednesday 29 April 2015

ஏப்ரல்-29, மிகப் பெரிய ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்த நாள்.

ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இவர், இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார். ராஜா ரவி வர்மா அவர்கள், அழகான புடவை அணிந்த பெண்களின் ஓவியங்களை மிக மிக சீராகவும், தெய்வீகமாகவும் சித்தரித்தார். அவர் சம்பிரதாயப் பற்றுடையவர்கள் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் கருதப்பட்டார். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்து, நவீன காலத்துக்கு ஏற்றவாறு மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவரான ராஜா ரவி வர்மா அவர்கள். 
பிறப்பு: ஏப்ரல் 29, 1848.,   பிறந்த இடம்: கிளிமானூர், திருவிதாங்கூர், கேரளா,. 
இறந்தது: அக்டோபர் 2, 1906.

No comments: