Monday 27 April 2015

வாழ்வுரிமை அழிப்பு ஆயுதம் ;வேலைநிறுத்தமே கேடயம்.

மத்திய அரசாங்கம்சாலைப்போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம்என்ற புதிய சட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்து வருகிறது. கால்நடையாக உலகத்தை சுற்றிய மனிதன் அதற்கு பின் குதிரை, எருது போன்ற கால்நடைகளை வாகனமாக பயணத்திற்கு பயன்படுத்தினான். தனிமனிதனின் பயணம் சிலர் அமர்ந்து செல்லும் பயணமாக மாறியது. மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், சாரட் வண்டிகள் என மனிதனின் வசதிக்கு ஏற்ப வாகனங்களின் அமைப்பும் இருந்தது.விஞ்ஞானம் வளர்ந்தது. நவீன மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியாவில் முதன்முதலாக பரோடா மகாராஜா ரஞ்சித் சிங் முதல் காரை இறக்குமதி செய்து, இந்திய சாலைகளில் மோட்டார் வாகன போக்குவரத்தை துவக்கி வைத்தார். வளர்ச்சிப் போக்கில் மோட்டார் வாகனங்கள் அதிகமானதால் சாலைப்போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த இந்திய- வெள்ளையர் அரசு 1939ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தை உருவாக்கியது. நீண்டகாலம் வெள்ளையர் உருவாக்கிய சட்டமே அமலில் இருந்தது. 1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் புதிதாக இயற்றப்பட்டது.
மோட்டார் வாகன சட்டம் எதற்காக?
மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்து அவை ஓடத் தகுதியானதா என மோட்டார் வாகன சட்டப்படி சான்றளித்த பின்பு தான் அந்த வாகனங்களை விற்பனை செய்ய முடியும். சாலைக்கு வரும் வாகனங்களை பதிவு செய்வது, வாகன வரி வசூலிப்பது, சாலை வரி வசூலிப்பது, ஓட்டுனருக்கு உரிமம் வழங்குவது, நடத்துனர் உரிமம் வழங்குவது, வண்டிகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்குவது, விபத்தானால் நஷ்ட ஈடு வழங்குவது போன்ற அத்தனை விசயங்களும் மோட்டார் வாகன சட்டப்படி தான் நடைபெற்று வருகிறது.இப்போதுள்ள மோட்டார் வாகன சட்டத்திற்கு பதிலாகசாலைப்போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச்சட்டம்என்ற புதிய சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விபத்துக்களின் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களை குறைப்பது, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது, போக்குவரத்து துறை மூலம் 4 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவது என்ற காரணத்தைக் கூறி புதிய சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.உற்பத்தியை பெருக்குவது, வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது என்று கூறினாலும் இச்சட்டத்தின் உண்மையான நோக்கம் மோட்டார் தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள் வசம் ஒப்படைப்பது தான்.எனவே இச்சட்டத்தின் உண்மையான நோக்கங்களை புரிந்து கொண்டு அதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.
இப்போதைய உரிமங்கள் இனிமேல் செல்லாது
நாடு முழுவதும் கோடிக்கணக்கான பேர் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர். இதில் பொதுப்போக்குவரத்துக்கான உரிமங்கள், தனியார் வாகன உரிமங்கள் என இரண்டு வகையான உரிமங்கள் உள்ளன. பொதுப்போக்குவரத்தை இயக்குவதற்கான வாகனங்களை பெறுவதற்கு தனியான பேட்ஜ் வாங்க வேண்டும்.இப்படி தனி வாகனங் களை இயக்குவதற்கு பொது வாகனத்தை இயக்குவதற்கு பெற்றுள்ள ஓட்டுனர் உரிமங்கள் அனைத்தும் புதிய சட்டம் அமலுக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும்.இரண்டு ஆண்டுகளுக் குள் புதிய சட்டப்படி ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும். எத்தனை ஆண்டுகள் வாகனங்களை இயக்கி இருந்தாலும் புதிதாக பயிற்சி ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் ( எல்.எல்.ஆர் ). பயிற்சி ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தனியாக தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றை பெற்று அதற்கு பின் பயிற்சி ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும். 9 மாத காலம் பயிற்சி ஓட்டுனர் காலம் முடிந்த பின்பு அந்த உரிமத்திற்கு மனு செய்ய வேண்டும். அதை பரிசோதித்து 3 மாதம் கழித்து உரிமம் வழங்கப்படும்.பயிற்சி ஓட்டுனருக்கான தேர்வு நடத்துவது, உரிமம் வழங்குவது, நிரந்தர உரிமம் வழங்குவது அனைத்தும் தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படும். பல ஆண்டுகள் ஓட்டுனர் பணியை செய்தவர் கூட பல ஆயிரம் செலவு செய்து தனியாரிடம் புதிய லைசென்ஸ் எடுக்க வேண்டும்.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர், கார் ஓட்டுநர் முதல் கனரக வாகன ஓட்டி வரை அனைவரும் புதிய உரிமம் பெற்றே ஆக வேண்டும். உரிமம் கொடுக்கும் அனுமதி கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் தான் ஒப்படைக்கப்படும்.வாட்டும் வறுமையில்வாழும் இளைஞர்களுக்குஓட்டுநர் உரிமம் கிடைக்குமா?

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

மீண்டும் முதலில் இருந்தா