Sunday 12 April 2015

ஏன் யாருக்குமே தெரிவதில்லை?. . .

பறந்திட இறகுகள் இல்லை. பசித்திட வயிறு உண்டு
பள்ளிக்கூடம் அறியாத குழந்தைகளுக்கு
மதிய உணவு வழங்கிட நாதி உண்டா?
அனைவருக்கும் அரசு வேலை கொடுத்தாலும்
எங்களுக்கு எந்த சாதியில் இட ஒதுக்கீடு

குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும்
இலவச அரிசி இலவச டி.வி
இலவச மிக்சி , இலவச கிரைண்டர் இலவச வேட்டி, சேலை
இவை எதுவுமே இல்லாத குழந்தைகளுக்கு,
இரண்டு சட்டையாவது இலவசமாய் கொடுக்குமா இந்த அரசாங்கம்
?
எப்போது மழை பெய்யுமென உங்களுக்கு ஏக்கம்.
எப்போது மழை நிற்குமென்பது எங்களின் கவலை.
கோடைக்கும், மழைக்கும் அடிக்கும் குளிருக்கும்
ஒதுங்க சிறிது இடங்கொடுங்கள்.போதும்.
நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்பது
ஏன் யாருக்குமே தெரிவதில்லை
?.

No comments: