Tuesday 21 April 2015

ஏப்ரல்-21 நமது BSNL -லில் வெற்றிகரமான வேலை நிறுத்தம் ...

அருமைத் தோழர்களே 1  நமது BSNL டெலிகாம் துறையில்,  தொழிற்சங்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைத்திட  நமது அகில இந்திய சங்கங்கள் அனைத்தும் ஒன்றி ணைந்து ,  BSNL ஊழியர்கள் + அதிகாரிகள் கூட்டமைப்பை உருவாக்கி, மக்கள்   சொத்தான BSNL பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாத்திட ஆர்ப்பாட்டம், 3 நாள் தார்ணா , இந்திய நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துஇயக்கம் , பிரதமருக்கு மெமோரண்டம் அதன்பின் இப்பொது  ஏப்ரல்-21 & 22 இரண்டு நாட்கள்  நமது BSNL-லில் உள்ள அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் வேலை நிறுத்த அறைகூவல்.... ஒரு தேச பக்த போராட்டத்தை, முதல் நாளான ஏப்ரல்-21 இன்று நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
பொது மேலாளர் அலுவலக CSC, பீபிகுளம், மதுரை 
நமது மதுரை தொலை தொடர்பு  மாவட்டத்தில் உள்ள 162 தொலைபேசியகங்களில் கிட்டத்தட்ட அனைத்தும் மூடிக்கிடந்தன என்ற செய்தி தான் வந்துள்ளது. எதோ ஒரு சில இடங்களில் ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய சில நண்பர்கள் வந்ததாக செய்திகள் கிடைத்துள்ளன. மாவட்ட மையம் அதை மிக சீரியசாக பார்க்கிறது. வேலை நிறுத்தம் செய்யாமல், பணிக்கு வந்த ஒரு சிலர்கள் ஒன்றும் புரியாதவர்கள் என்று அர்த்தம் அல்ல.... மாறாக  மற்றவர்களை ஏமாற்றுவதாக  நினைத்துக்கொண்டு, அவர்களை அவர்களே! ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நமது துறை வளர்ச்சிக்காக நமது முந்தய தலைவர்கள், தோழர்கள்  தனது உடலில் உள்ள  உறுப்புக்களை இழந்து ஊனமாகி இருக்கின்றார்கள், ஏன்  உயிரை கூட இழந்திருக்கின்றார்கள். பல்வேறு தியாகத்தால் வளர்க்கப்பட்ட இந்த BSNL நிறுவனத்தை அரசும்+தனியார் கம்பெனிகளும் கூட்டுச் சதியால் அளிக்க முற்பட்டு இருக்கிறார்கள்.
மதுரை பொதுமேலாளர் அலுவலக முன் வாயில் 
நமது BSNLநிறுவனம் நமது கண் முன்னாலேயே அளிக்க அனுமதிக்கலாமா ? கண்ணின் மணியாய் காத்திட வேண்டாமா ?  " நாளெல்லாம் நமது செல்வம் கொள்ளை போகவோ ? நாங்கள் சாகவோ ? ..என்று,  பாரதி அன்று அந்த வெள்ளைகார கொள்ளையர்களை பற்றி மக்களை பார்த்து கேள்வி எழுப்பினனே, அதே நிலை இன்று மீண்டும் வந்துள்ளதே, நம் அனைவருக்கும் கோபம் வரவேண்டாமா ? நம்  தேசத்தின் மக்கள் சொத்தான, பொதுத் துறை நிறுவனமான, நமது BSNL பாதுகாப்பிற்க்கான போராட்டத்தில் யாரேனும் விலகி இருந்தால் அது துரோக செயலாகும். ஆகவே, அப்படிப்பட்ட செயலை யாரும் செய்ய வேண்டாம் என மாவட்ட மையம் கேட்டுக்கொள்கிறது.....
 மதுரை தல்லாகுளம் வாடிக்கையாளர்  சேவைமையம் 

மதுரை லெவல்-4 வளாக முன் நுழைவு வாயில், தல்லாகுளம்
நமது போராட்டத்திற்கு ஆதரவாக AIIEAஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள போஸ்டர்.---நன்றியுடன் ----போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ், சூரியன்

No comments: