Wednesday 22 April 2015

பத்திரிக்கைகளின் பார்வையில் நமது BSNLபோராட்டம்...

அருமைத் தோழர்களே !  நமது BSNLபோராட்டம்  குறித்து பல்வேறு பத்திரிகையில்  செய்திகள் வெளிவந்துள்ளன  அவற்றை தங்களின் பார்வைக்கு முன்வைத்துள்ளோம் ... 
BSNL நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம்
தொலைத்தொடர்புத் துறையைப் புத்தாக்கம் செய்வதற்கு மொபைல் கருவிகள், பிராட்பேண்ட் சேவை வழங்குவதற்கான மோடம்கள், ட்ராப் ஒயர்கள், தொலைபேசிக் கருவிகள், கேபிள் உள்ளிட்டகருவிகள் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும், மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளைத் தேசத்தின் சொத்தான BSNL நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும், கிராமப்புறச் சேவைகளுக்கான நஷ்டத்தை ஈடுகட்டுவதாக உறுதியளித்திருந்த மத்திய அரசு அதைத் தட்டிக்கழிப்பதால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவது போன்ற தோற்றத்தை அரசே ஏற்படுத்துகிறது.இதைக் கண்டித்தும் BSNL நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலை நிறுத்தத்தையொட்டி மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் உட்பட மதுரை, தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து BSNL அலுவலகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் முழுமையாக இயங்க வில்லை. நாட்டையும், BSNL நிறுவனத்தையும் பாதுகாக்கும் தேசபக்த போராட்டத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.போராட்டம் குறித்து BSNL அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் S.சூரியன் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-BSNL ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது ஊதிய உயர்விற்காகவோ, பதவி உயர்விற்காகவோ இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை.
நாட்டைப் பாதுகாக்கவேண்டும். பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்ற உன்னத லட்சியமே வேலை நிறுத்தத்தின் நோக்கம். மதுரை தொலைத் தொடர்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, தேனி, திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களில் 162 தொலைபேசி அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் 1,874 ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றுள்ளனர்.மத்திய அரசு அகில இந்திய தலைமையோடு பேச்சுவார்த்தை நடத்த BSNL நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும் என்றார். பேட்டியின்போது மற்ற சங்கங்களின் மாவட்டச்செயலாளர்கள் S.சிவகுருநாதன், K.தெய்வேந்திரன், S.சுப்பிரமணியன், M.பாலசுப்பிரமணியன், S.கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்..
 







 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி BSNL. அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து BSNL. ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-
விஸ்தரிப்பு மற்றும் மேம்பட்ட சேவைகளுக்கு தேவையான கருவிகளை BSNL. நிறுவனத்துக்கு உடனடியாக வாங்க வேண்டும். கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளுக்கான சேவைகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.பல மாத காலமாக காலியாக உள்ள டைரக்டர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்BSNL-ன் சொத்துக்களை அதன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் BSNL. சேவைகளை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும்.BSNL.லின் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஓய்வூதிய பலன்கள் விஷயத்தில் மத்திய அமைச்சரவையின் முடிவை அமல்படுத்த வேண்டும். புதிய ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தை நடத்துகிறோம்.இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால், BSNL. தொலைபேசி நிலையங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள், பழுதுநீக்கும் மையங்கள் என அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.மதுரை தல்லாகுளம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து BSNL அலுவலகத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.தல்லாகுளம் BSNL. அலுவகலத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அலுவலகம் முன்பு ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தல்லாகுளம், எல்லீஸ்நகர், பீபி குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலுவலகம், வாடிக்கையாளர் சேவை மையம் ஆகியவை வெறிச்சோடிக் கிடந்தன.--- போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் .

No comments: