Monday 13 April 2015

திருச்சி ஒப்பந்த தொழிலாளர் மாநாடு அறைகூவல்...

ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ. 15 ஆயிரம் மாத ஊதியமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மே 12ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மறியல் போராட்டம் நடத்த சிஐடியு தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளதுதிருச்சி திருவெறும்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில ஒப்பந்தத் தொழிலாளர் கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தொழில்துறையில் உரிமம் பெற்று ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் ரூ. 15 ஆயிரம் மாத ஊதியமாக வழங்க வேண்டும். நிரந்தரத் தன்மையுள்ள பணிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்துச் சலுகை களையும் வழங்க வேண்டும்.அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் தொழிலாளர் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  இவற்றை வலியுறுக்தி வரும் ஜூலை மாதம் சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தவும், முன்னதாக மே 12ஆம் தேதி அனைத்து மாவட்டங் களிலும் மறியல் போராட்டம் நடத்தவும், ஜூன் மாதம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.மாநாட்டில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலர் சுகுமாறன், மாநிலச் செயலர் ஆர். ராஜா, மாநிலக் குழு உறுப்பினர் ஆர். சம்பத் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் 300 பேர் பங்கேற்றனர். முன்னதாக பெல் கந்தசாமி வரவேற்றார். முடிவில் மாவட்டப் பொருளாளர் ரெங்கராஜன் நன்றி கூறினார்.

No comments: